தங்க நகைப்பட்டறை தொழிலாளி தற்கொலை
கோவை, செப்.11: கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதி அருகேயுள்ள டி.கே தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (38). இவர், சாமி ஐயர் புது வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தங்க நகை செய்யும் வேலை பார்த்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இதனை...
மாநகராட்சி உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம்
கோவை, செப்.11 : கோவை மாநகராட்சியில் நிர்வாக நலன் கருதி உதவி ஆணையர்கள் இருவரை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி மத்திய மண்டல உதவி ஆணையராக இருந்த சீ.செந்தில்குமரனை வடக்கு மண்டல உதவி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல கிழக்கு மண்டல உதவி ஆணையராக இருந்த க.முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக...
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, செப்.11 : கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்ணப்பன் என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜவேல் முன்னிலை வகித்தார். அப்போது காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலதாமதமின்றி...
பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி போலீசில் தஞ்சம்
கோவை, செப். 10: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த ஹரிணி என்பவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும், திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன்-பச்சையம்மாள் தம்பதி மகன் ருபேஸ்குமார் என்பவரும் காதலித்து வந்தோம். நேற்று முன்தினம் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் செய்து...
கூடலூர் நகராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
பெ.நா.பாளையம், செப்.10: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் தார் சாலை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. 13-வது வார்டு ரேஷன் கடை வீதியில் பழுதடைந்த சாலையை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் புதிய தார் சாலையாக புதுப்பிக்கும் பணி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற பூமி பூஜையில்...
மாநகராட்சி திட்டங்களை கேட்டறிந்த ஜெர்மனி மாணவர்கள்
கோவை, செப். 10: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேற்று நேரில் சந்தித்து மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். கோவை தனியார் நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த மாணவர்களை 2025ம் ஆண்டுக்கான இந்திய வெளிநாட்டுப் படிப்பு திட்டத்தை அறிய ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியாவின் கலாசாரம்,...
மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் இன்று ரத்து
கோவை, செப். 9: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்கின்றனர். இதேபோல், இன்று மாநகராட்சி அலுவலகத்தில்...
பஸ்சில் பயணியிடம் செல்போன் திருட்டு
கோவை, செப். 9: கோவை சாய்பாபா காலனி விசிகேஎன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர், நேற்று முன்தினம் காலை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். ரயில் நிலையம் அருகே பஸ் வந்த போது அவரது அருகில் இருந்த வாலிபர் ஒருவர் மணிகண்டன்...
கஞ்சாவுடன் மேற்கு வங்க வாலிபர் கைது
கோவை, செப். 9: கோவை காட்டூர் போலீசார் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் போலீசார் அவரை சோதனை செய்தனர். அதில் அவரிடம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து...