ஐ.டி காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது
சென்னை, ஆக.20: ஐ.டி காரிடர் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும், என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரமணி, ஐ.டி காரிடர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில், செயற் பொறியாளர், இயக்கம் & பராமரிப்பு, ஐ.டி...
மின்சார ரயிலில் தனியாக சென்ற 3 குழந்தைகள் மீட்பு
ஆலந்தூர், ஆக.19: தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் நேற்று காலை புறப்பட்டது. பழவந்தாங்கல் ரயில் நிலையம் வந்தபோது ரோந்து பணியில் இருந்த பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கையில் அமர்ந்து இருப்பதைக் கண்டனர். விசாரித்த போது குழந்தைகள்...
கல்லீரல் முறைகேடு தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, ஆக.19: கல்லீரல் முறைகேடுக்கு யார் காரணம் என்பதை ஆராய்ந்து காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ள மருத்துவ கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கோண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம்...
விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று சென்னை திரும்பியவர்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்
சென்னை, ஆக. 19: கடந்த வாரம் 15ம் தேதி சுதந்திர தின விழாவை தொடர்ந்து சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்தது. இதனால் சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் அரசு பேருந்து உள்பட பல்வேறு வாகனங்களில் சென்றனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து...
மெட்ரோ பணிக்கான இரும்புகளை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
துரைப்பாக்கம், ஆக.18: துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்கள்...
பல்லாவரம் - திருநீர்மலை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து
பல்லாவரம், ஆக.18: பல்லாவரத்தில் இருந்து பம்மல் சங்கர் நகர், காமராஜபுரம் வழியாக திருநீர்மலை செல்லும் சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், சமீப காலமாக இரவு நேரங்களில் அதிகளவில் எருமை மாடுகள், கும்பல் கும்பலாக சாலையில்...
ரூ1.80 கோடி மதிப்பீட்டில் மாதவரம் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க முடிவு
மாதவரம், ஆக.18: மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தை நவீனமுறையில் கட்டமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். அதன்பேரில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ1.80 கோடி மதிப்பீட்டில் மாதவரம் பேருந்து நிலையத்தை நவீனமுறையில் சீரமைக்கும்...
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு காமராஜர், ராஜாஜி சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னை, ஆக. 14: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தலைமைச் செயலகத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நாளை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதனால் நாளை...
சிறுமியை கட்டிபோட்டு வன்கொடுமை முயற்சி 15 சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரணை
அண்ணாநகர், ஆக. 14: அண்ணாநகரில் சிறுமியை கட்டிபோட்டு வன்கொடுமை முயற்சி செய்த வழக்கில் 15 சந்தேக நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 47 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்...