மழைநீர் வடிகால் பணி காரணமாக ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிப்பாதையாக மாற்றம்

சென்னை: டிடிகே சாலையில் ஆழ்வார்பேட்டை சிக்னல் மான் னிவாசா சாலை வரை 230 மீட்டர் வரை பழுதடைந்த மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால், இன்று முதல் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதன்...

சென்னையில் மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்ற 4,000 பேர் கைது: 2.9 ெமட்ரிக் டன் கஞ்சா, 67,700 போதை மாத்திரைகள் பறிமுதல்

By Suresh
10 Aug 2025

சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையிலான போலீசார் ‘போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தி போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுத்து வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தென்மாநில டிஜிபிக்கள் ஒருங்கிணைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள்...

அச்சுறுத்தும் வெறிநாய் கடி தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி:  30 மருத்துவ குழுக்கள் அமைப்பு சென்னை மாநகராட்சி அதிரடி

By Karthik Yash
08 Aug 2025

சென்னை, ஆக.9: சென்னையில் அச்சுறுத்தும் வெறிநாய் கடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க சென்னையில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி திட்டத்தை சென்னை மாநகராட்சி இன்று முதல் தொடங்குகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே செல்ல வேண்டி உள்ளது. வாகனங்களில் வேகமாக செல்லும்போது நாய் துரத்துவதால் அச்சத்தில்...

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 200 பேரிடம் ரூ.5 கோடி மோசடி: 6 பேர் கைது

By Karthik Yash
08 Aug 2025

சென்னை, ஆக.9: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 200க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்து, போலி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 7ம் ேததி புகார் ஒன்று அளித்தார்....

காதலை கைவிட முயன்ற தகராறில் நடுரோட்டில் ஓடஓட விரட்டி காதலனை தாக்கிய மாணவி

By Karthik Yash
08 Aug 2025

சென்னை, ஆக.9: காதலை கைவிட முயன்ற தகராறில், தனது காதலனை நடுரோட்டில் ஓடஓட விரட்டி கட்டையால் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தாக்கிய சம்பவம் கே.கே.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அசோக்நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (21), கார்பெண்டர். இவர் நெசப்பாக்கத்தை சேர்ந்த 21 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவியை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்....

சென்னையில் விபத்து நடைபெறும் சாலைகளில் 513 இடங்களில் ஆபத்து குறியீடு: மாநகராட்சி தீவிரம்

By Karthik Yash
07 Aug 2025

சென்னை, ஆக.8: சென்னையில் விபத்து நிகழும் சாலைகளில் 513 இடங்களில் ஆபத்து குறியீடுகள் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னையில் சாலை விபத்துகளை குறைப்பதற்கும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதிகப்படியாக போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், போக்குவரத்து...

தந்தை படுகொலைக்கு பழிக்குப்பழியாக 17 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை தீர்த்துக்கட்டிய கல்லூரி மாணவன்: பரபரப்பு வாக்குமூலம்

By Karthik Yash
07 Aug 2025

அண்ணாநகர், ஆக.8: தந்தை படுகொலைக்கு பழிக்குப்பழியாக, 17 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை டி.பி.சத்திரம் ஜோதி அம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (42), பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி, 2 மகள்கள்...

போலீஸ் எனக்கூறி ஏமாற்றிய நகை கடைக்காரர் கைது

By Karthik Yash
07 Aug 2025

தண்டையார்பேட்டை, ஆக.8: காவலர் அடையாள அட்டையை போலியாக தயாரித்த நகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை போலீசார் வாகன தணிகையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அந்த நபர் போலீஸ் எனக் கூறினார். சந்தேகமடைந்த போலீசார்...

தி.நகர், ஆழ்வார்பேட்டையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் இடங்களில் ரூ.7.5 கோடியில் புதுப்பிக்கும் பணி: மாநகராட்சி திட்டம்

By Karthik Yash
06 Aug 2025

சென்னை, ஆக.7: சென்னையில் இரண்டு முக்கிய மேம்பாலங்களின் கீழுள்ள இடங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தி.நகர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் இடங்களில் மொத்தம் ரூ.7.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த திட்டம், பயன்படுத்தப்படாத நகர இடங்களை மேம்படுத்தி, மக்களுக்கும் பயணிகளுக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தி.நகரில் என்ன...

சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

By Karthik Yash
06 Aug 2025

சென்னை, ஆக.7: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், 165 முக்கிய சந்திப்புகளில் புதிய ஸ்மார்ட் டிராபிக் சிக்னல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய அமைப்பு, வாகனங்கள் அதிகம் உள்ள பாதைகளில் பச்சை விளக்கு 120 வினாடிகள் வரை நீடிக்கும்; வாகனங்கள் குறைவாக உள்ள இடங்களில் 30 வினாடிகளாக குறையும். அதன்படி, இந்த...