தூய்மைப்பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் பணி பாதுகாப்பு, பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும்: போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை, ஆக.13: தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனம் மூலமாக பணி பாதுகாப்பு மற்றும் பணப்பலன்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் என திட்டவட்டமாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார்...
கள்ளக்காதலுக்காக விஷம் கொடுத்து குழந்தைகள் கொலை ஆயுள் தண்டனையை எதிர்த்து குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 13: கள்ளக்காதலுக்காக குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து குன்றத்தூர் அபிராமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் அபிராமி தம்பதி. இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதுகளில் 2 குழந்தைகள் இருந்தனர். அபிராமி வீட்டில் இருந்தபடி டிக்டாக்கில் வீடியோ போட்டு பிரபலமானார்....
பிளஸ்1 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கலாம்
சென்னை, ஆக.13: கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ் 1 பொதுத் தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில்பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் விடைத்தாள் நகல்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதன்படி இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள்...
விதிமீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை
பெரம்பூர், ஆக.12: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பாரதிதாசன் தெருவில் உள்ள கலைச்செல்வி என்பவருக்கு சொந்தமான கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டு இருப்பதாக, மாநகராட்சிக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் மேற்கண்ட கட்டிடத்தில் ஆய்வு செய்தபோது, விதிமீறி கட்டுமானம் நடைபெற்றது தெரியவந்தது. இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி ராஜ்குமார், செயற் பொறியாளர் அரிநாத், உதவி செயற் பொறியாளர் சேகர், உதவி...
79வது சுதந்திர தின கொண்டாட்டம் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்: பயணிகள் முன்னதாக வர அறிவுறுத்தல் திரவ பொருள், அல்வா, ஜாமுக்கு தடை
மீனம்பாக்கம், ஆக. 12: நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் காலணிகள், பெல்ட்டுகள், குளிருக்கு அணியும் ஜாக்கெட்டுகள்...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 வார்டுகளில் இன்று நடக்கிறது
சென்னை, ஆக.12: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-47ல் கொருக்குப்பேட்டை, ஏ.இ.எம்.பள்ளி மைதானம், ராயபுரம் மண்டலம், வார்டு-56ல் பிரகாசம் சாலையில் உள்ள ஹையாத் மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-67ல் திரு.வி.க. நகர் காமராஜர் திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-100ல் டி.பி.சத்திரம் பிரதான சாலையில் அண்ணா சமுதாயக்கூடம், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136ல் சாலிகிராமம்,...
மணலி புதுநகரில் 10 ஆண்டாக கிடப்பில் குடிநீர் திட்ட பணிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை
திருவொற்றியூர்: மணலி மண்டலம் 15, 16 ஆகிய வார்டுகளை உள்ளடக்கி மணலி புதுநகர், சடையன்குப்பம், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் மாநகராட்சி சார்பில் பொது குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்....
கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி
புழல்: புழல் லட்சுமிபுரம் காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் காதர்பாஷா (39). கடந்த 17 வருடங்களுக்கு முன்பு நெய்வேலி, வடலூரைச் சேர்ந்த நிலோபர் நிஷா (38) என்ற கணவரை இழந்த பெண்ணை 3வதாக திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில், காதர் பாஷாவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் காதர்பாஷாவுக்கும், நிலோபர் நிஷாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம்...
சென்னை பல்கலை விடுதியில் பிரசவித்த மாணவி; கீழே கிடந்ததாக கூறி தனது குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைத்த காதலன்: விசாரணையில் உளறியதால் சிக்கினார்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு, வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் கட்டை பையுடன் சென்று, நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியிடம், ‘கட்டை பையில் குழந்தை ஒன்று சாலையோரம் கிடந்தது. முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு வந்துள்ளேன்,’ என கூறியுள்ளார். உடனே, செக்யூரிட்டிகள் அந்த பையை திறந்து பார்த்த போது, ஆண் குழந்தை...