இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்கள் அமைக்க 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை, ஆக.6: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், இயற்கை எரிவாயு நிரப்புளண நிலையங்களை அமைப்பதற்கு 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. பேருந்துகளுக்கு மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 2 எரிவாயு விநியோக நிறுவனங்களான டொரண்ட் காஸ் மற்றும் திங்க் காஸ் நிறுவனங்களுடன், 2 பேருந்து டிப்போக்களில் இயற்கை...
கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திருவொற்றியூர், ஆக. 6: திருவெற்றியூர் சன்னதி தெருவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் உள்ளது. பூலோக கயிலாயம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலின் உள்புறத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள், மற்றும் வாத்துகள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களையும், வாத்துகளையும்...
10 ஆண்டாக பேசாததால் ஆத்திரம் மனைவி வாயில் ஆசிட் ஊற்றிய கணவர் கைது
பெரம்பூர், ஆக.5: அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (44), பெயின்டர். இவரது மனைவி டெய்சி ராணி (39). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சீனிவாசனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஒரே வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக...
முன்விரோத தகராறில் வழக்கறிஞர் உள்பட இருவருக்கு வெட்டு
பெரம்பூர், ஆக.5: வியாசர்பாடி பி.வி.காலனி சாந்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (25), வழக்கறிஞர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன் (30), பினாயில் மொத்த விற்பனை செய்து வருகிறார். இவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு, வியாசர்பாடி பி.வி.காலனி 1வது குறுக்கு தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அதே பகுதியை...
காசிமேடு துறைமுகத்தில் ஆந்திர மீனவர்கள் மோதல்; ஒருவர் படுகாயம்
தண்டையார்பேட்டை ஆக.5: ஆந்திர மாநிலம் சிகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீலகண்டன் (38) மற்றும் காரி நரேஷ் (27). இவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த அலெக்ஸ் (41) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடலில் மீன் பிடிக்க சென்ற போது, போதையில் நீலகண்டனுக்கும்,...
திட்டமிடாத வடிகால் பணி காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
பல்லாவரம் ஆக.4: பல்லாவரம் அருகே திட்டமிடாத வடிகால் பணி காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஆண்டாள் நகர், ராமானுஜர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பொழிச்சலூர் முதல்...
போதை பொருள் விற்ற வழக்கில் ஏஜென்ட் சிக்கினார்
சென்னை, ஆக.4: திருவல்லிக்கேணி பகுதியில் சூடோ எபிட்ரின் என்ற போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஏஜென்ட்டை போலீசார் கைது ெசய்தனர். திருவல்லிக்கேணி லால்பேகம் தெருவில் சிலர் போதை பொருள் விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த மாதம் 28ம் தேதி...
மாநகராட்சி ஒப்பந்ததாரரை வெட்டிய வாலிபருக்கு வலை
பெரம்பூர், ஆக.4: வியாசர்பாடி பி.வி.காலனி 19வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (56), சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ராமச்சந்திரனின் தங்கை மகன் பிரதீப் இவருடன் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் ராமச்சந்திரனின் தோள்பட்டையில் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த ராமச்சந்திரன்...
நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
சென்னை: நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐஜிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நெய்வேலியை சேர்ந்த கலா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், என் மகன் கடந்த ஏப்ரல் 10ம் தேதி தாம்பரத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, தாம்பரம் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர்...