1 கிலோ 781 கிராம் தங்கம் திருட்டு வழக்கில் மேற்கு வங்கத்தில் பதுங்கிய 4 பேர் சுற்றிவளைத்து கைது
தண்டையார்பேட்டை, நவ.18: புரசைவாக்கம் அடுத்த தாசபிரகாஷ் பூந்தமல்லி நெடுஞ்சாலையை சேர்ந்தவர் ஹரிஷ் (34). இவர், பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி ஹரிஷின் பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த கார்த்திக் பேரா, பாப்பன் ராய், நாராயணன் மைட்டி உள்பட 4 பேர்...
மகன் படிக்காமல் ஊர் சுற்றியதால் தாய் தூக்கிட்டு தற்கொலை
வேளச்சேரி, நவ.15: வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பானுமதி (38). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவர் பிரிந்து சென்றதால், மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் பானுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், பானுமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக...
வாடிக்கையாளரை கடிக்க பாய்ந்ததால் தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது
சென்னை, நவ.15: மயிலாப்பூர் பஜார் சாலையில் மோகன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு, டீ குடிக்க நேற்று முன்தினம் மதியம் முதியவர் ஒருவர் வந்துள்ளார். அப்போது தெருவில் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று முதியவரை விரட்டி கடிக்க பாய்ந்தது. இதை கவனித்த டீக்கடை உரிமையாளர் மோகன், நாயை விரட்டி முதியவரை காப்பாற்றினர். ...
ஈச்சங்காடு சிக்னல் அருகே குப்பையில் வீசப்பட்ட ஆண் குழந்தை சடலம்: போலீசார் விசாரணை
வேளச்சேரி, நவ.15: ஈச்சங்காடு சிக்னல் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே, நேற்று தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பிளாஸ்டிக் பையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து...
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, நவ.13: தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை நவ.15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார், என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை கல்வி, மருத்துவத்திற்கும் அதிக...
மாதவரம் அருகே ஆட்டோவில் வந்த பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு: ஓட்டுநர் கைது
மாதவரம், நவ.13: மாதவரம் அருகே ஆட்டோவில் வந்த பயணியிடம் 6 சவரன் நகை பறித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மாதவரத்தை சேர்ந்தவர் அஜித் நாயர்(33). வட பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று நிறுவனத்திற்கு செல்ல இவரும் அதே நிறுவனத்தில் பணி புரியும் 20 வயது பெண்ணும் மாதவரம் பேருந்து...
ஆன்லைன் செயலியில் பழகி இளம்பெண் பலாத்காரம் கன்னியாகுமரி வாலிபர் கைது
தண்டையார்பேட்டை, நவ.13: ஆன்லைன் செயலியில் பழகி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கன்னியாகுமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மோஜ் என்ற செயலி மூலமாக நண்பர்களோடு பழகி வந்தார். அந்த வகையில் கன்னியாகுமரியை சேர்ந்த லிபின் ராஜ் என்ற வாலிபர் இளம் பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன்...
நந்தனம் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் முதல்கட்ட வழித்தட சுரங்கப்பாதைக்கு அடியில் 2ம் கட்ட வழித்தட சுரங்கம்: அதிகாரிகள் தகவல்
சென்னை, நவ.12: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரையிலான சுரங்கப்பாதை, ஏற்கனவே உள்ள நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் கட்ட சுரங்கப்பாதைக்கு அடியில், செங்குத்தாக அமைக்கப்பட உள்ளது. சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 வழித்தடங்களில்...
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
திருவொற்றியூர், நவ.12: சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் எழிலன், மணலி காவல் சரகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியாற்றியபோது, மணலி எம்எப்எல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பைக்கில் வந்த எண்ணூர் தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம், மது அருந்தியுள்ளாரா என கருவி மூலம் சோதனை செய்துள்ளார். அதில்,...