கிண்டியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய போக்குவரத்து முனையம்: 3.43 ஏக்கரில் அமைகிறது
சென்னை, ஜூலை 30: கிண்டியில் ரூ.400 கோடியில், 3.43 ஏக்கரில் புதிய போக்குவரத்து முனையம் அமைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் மைய பகுதியாக கிண்டி அமைந்துள்ளது. தாம்பரம் - தி.நகர், கோயம்பேடு - புதுச்சேரி, தாம்பரம் - பிராட்வே, அம்பத்தூர் - வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பேருந்து வழித்தடத்தடங்களுக்கும், கடற்கரை - தாம்பரம் ரயில்...
சிறுமி பலாத்கார வழக்கில் கைதான அசாம் வாலிபருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்: வழக்கறிஞர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு
சென்னை, ஜூலை 30: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை மர்ம நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 25ம் தேதி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் புழல் மத்திய...
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு உறவினருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை, ஜூலை 30: மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அவரது உறவினரின் கடைக்கு சென்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு மே 15ம் தேதி கடையில் இருந்த சிறுமியை 30 வயதான அவரது உறவினர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்படி பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரித்த...
ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோயில்களுக்கு சென்றவர்களால் பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்
சென்னை, ஜூலை 29: ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களால், பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூர், மேல்மலையனூர், சமயபுரம், மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்னை புறநகர் பகுதியில் இருந்து கார் மற்றும் அரசு பேருந்துகளில் பக்தர்கள் அதிகளவில் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று...
தெரு மின்கம்பங்கள் மூலம் வருமானம்: மாநகராட்சி திட்டம்
சென்னை, ஜூலை 29: தெரு மின்கம்பங்கள் மூலம் வருமானம் ஈட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தெரு மின்கம்பங்களிலும், பேருந்து வழித்தடங்களில் உள்ள சென்டர் மீடியன்களில் விளம்பரங்கள் செய்ய, தனியாருக்கு அனுமதி வழங்கி, 3 ஆண்டுகளில் ரூ.94.6 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, 6 ஆண்டு கால பொதுத் தனியார் கூட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது....
ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயம்
சென்னை, ஜூலை 29: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மகாவீரபுரத்தை சேர்ந்த 50 பேர் நேற்று முன்தினம் ஒரு பேருந்து மூலம் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். மாலை 6 மணிக்கு கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி கோபி (23) உள்ளிட்ட 3 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகில் இருந்த சில மீனவர்கள் விரைந்து...
தரமணி பாலிடெக்னிக் வளாகத்தில் 3 நாமத்துடன் நல்லபாம்பு
வேளச்சேரி: தரமணி, ஓ.எம்.ஆர். சாலையில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் நேற்று நாகபாம்பு ஒன்று இருப்பதை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர், வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பாம்பு பிடிக்கும் ஊழியர்கள், உரிய உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி வளாகத்தில் தேடினர். நீண்ட தேடலுக்கு...
காரில் குட்கா கடத்திய 4 வாலிபர்கள் கைது: 200 கிலோ பறிமுதல்
பூந்தமல்லி: வெளி மாநிலங்களில் இருந்து பூந்தமல்லி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், சபரிநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பூந்தமல்லி,...
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சியே ஏற்க முடிவு
சென்னை: சென்னையில் உள்ள சாலைகளில் பாதாள சாக்கடை, வடிகால், மின் புதைவடம், தனியார் நிறுவன கேபிள் பதிக்கும் பணி உள்ளிட்டவற்றுக்காக அடிக்கடி பள்ளம் தோண்டப்படுகிறது. இதற்காக, அந்தந்த துறைகள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி, பணிகள் முடிந்த பின்னர் சாலையை சீரமைக்க வேண்டும். ஆனால், பணிகள் முடிந்த பிறகும் இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல்...