காரில் குட்கா கடத்திய 4 வாலிபர்கள் கைது: 200 கிலோ பறிமுதல்
பூந்தமல்லி: வெளி மாநிலங்களில் இருந்து பூந்தமல்லி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், சபரிநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பூந்தமல்லி,...
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சியே ஏற்க முடிவு
சென்னை: சென்னையில் உள்ள சாலைகளில் பாதாள சாக்கடை, வடிகால், மின் புதைவடம், தனியார் நிறுவன கேபிள் பதிக்கும் பணி உள்ளிட்டவற்றுக்காக அடிக்கடி பள்ளம் தோண்டப்படுகிறது. இதற்காக, அந்தந்த துறைகள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி, பணிகள் முடிந்த பின்னர் சாலையை சீரமைக்க வேண்டும். ஆனால், பணிகள் முடிந்த பிறகும் இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல்...
இன்று பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ரத்து
சென்னை, ஜூலை 26: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை இடையே இன்று பகல் 1.15 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக கும்டிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை...
பழைய இரும்பு குடோனில் ராட்சத ஆசிட் டேங்க்கை உடைத்தபோது காஸ் கசிவு: கண் எரிச்சலால் பொதுமக்கள் அவதி
திருவொற்றியூர், ஜூலை 26: திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெருவில் ராமலிங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான குடோன்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள ஒரு பழைய இரும்பு பொருட்களை வியாபாரம் செய்யும் குடோனில், நேற்று ராட்சத ஆசிட் டேங்கரை அங்குள்ள பணியாளர்கள் வெட்டி உடைக்க முயன்றனர். அப்போது, அந்த டேங்கரிலிருந்து...
பாலியல் தொழில் செய்த பெண் புரோக்கர் கைது: தொடர்ந்து வீடுகளை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீதும் வழக்கு பாய்கிறது
சென்னை, ஜூலை 26: சாலிகிராமம் திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் பேரில், விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அதில் சூளைமேடு பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (33) என்பவர், தனது ஆண் நண்பருடன்...
விபத்தில் உயிரிழந்த மாணவன் உடல் உறுப்புகள் தானம்
அம்பத்தூர் ஜூலை 25: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ரகுமூர்த்தி. இவரது மனைவி லஷ்மி. இவர்களது மூத்த மகன் சந்தோஷ் (24), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2வது மகன் ஹேம்நாத் (20), நெற்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில்...
சுகாதாரமற்ற முறையில் உணவு விற்ற கடைகள் அகற்றம்
அண்ணாநகர், ஜூலை 25: கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில், தள்ளுவண்டி கடை உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்தன. இது தொடர்பாக, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதிக்கு வந்த புகாரின் பேரில், அவர் நேரில் ஆய்வு செய்து,...
நகரமைப்பு பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் 28ம் தேதி வரை நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஜூலை 25: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இணையவழி சேவைகளின் பயன்பாடுகள் சேவைகளின் பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை அளவிடுதல் ஆகியவற்றை நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையகங்களை மாநில தரவு மையத்திற்கு இடம் பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு...
கோயம்பேடு மார்க்கெட் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக அமைத்த 300 கடைகள் அகற்றம்: அங்காடி நிர்வாக அதிகாரி அதிரடி
அண்ணாநகர், ஜூலை 24: கோயம்பேடு மார்க்கெட் அருகே அங்காடி நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 300க்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டுள்ளன. இந்த கடைகளால் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதன்படி அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள இடத்தை ஆய்வு செய்து, ஏற்கனவே...