19 மண்டல அலுவலக பகுதிகளில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்ய சிறப்பு முகாம்
சென்னை, செப். 11: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் 13ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. பொது விநியோக திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர...
பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, செப்.10: பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-கூடூர் ரயில் நிலையம் மற்றும் பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே இரவு 11.20...
சென்னை விமான நிலையம் - திரிசூலம் - மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைப்பு சுரங்கப்பாதை பராமரிப்பு இல்லை: காட்சி பொருளான லிப்ட் இருளில் தவிக்கும் பயணிகள்
மீனம்பாக்கம், செப். 10: சென்னை விமான நிலையம் - திரிசூலம் மெட்ரோ ரயில் நிலையம் இணைப்பு சுரங்கப்பாதை பராமரிப்பு இல்லாமல் லிபட் இயங்காமலும், மின்விளக்குகளின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சென்னை விமான நிலையம்- திரிசூலம் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் நீளமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை சென்னை - திருச்சி...
காவலர் நாள் கொண்டாட்டம் 200 காவலர்கள் ரத்ததானம்
சென்னை, செப்.10: காவலர் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 200 காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ரத்ததானம் வழங்கினர். முதன் முதலாக 1859ம் ஆண்டு ‘மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றிவிக்கப்பட்ட செப்டம்பர் 6ம் நாள், இனி ஆண்டுதோறும் ‘காவலர் நாளாக’...
சாலை தடுப்பு சுவரில் மாநகர பேருந்து மோதல்
பெரம்பூர், செப்.9: திருவிக நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தடம் எண்:170 தாழ்த்தள மின் பேருந்து நேற்று காலை 6 மணியளவில் பயணிகளுடன் கிண்டி புறப்பட்டு சென்றது. பேருந்தை முருகன்(47) என்பவர் ஓட்டி வந்தார். கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு மூகாம்பிகை சிக்னல் அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் கட்டுப்பாட்டை இழந்து மோதியது....
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
தண்டையார்பேட்டை, செப்.9: கொருக்குப்பேட்டையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம், திருவிக நகர் மண்டலத்தில், தூய்மை பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை எதிரே கடந்த மாதம் 13 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக போராட்டத்தில்...
பல்லாவரம் அரசு பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
பல்லாவரம், செப். 9: பல்லாவரம் மறைமலை அடிகள் அரசுப்பள்ளியில் ஆசிரியர் பத்மநாபன், நல்லாசிரியர் விருது பெற்றார். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 5ம்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு...
முகப்பேர் பகுதியில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை தெரிவித்து பல லட்சம் வசூல் வேட்டை: இஎஸ்ஐ மருத்துவர் மீது வழக்குப்பதிவு
அண்ணாநகர், செப்.3: முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தனியார் ஸ்கேன் சென்டர் உள்ளது. இங்கு மாலை நேரத்தில் மட்டும் கர்ப்பிணிகள் அதிகளவில் வந்து சென்றது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்த போது, ஸ்கேன் சென்டரில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சோதனை நடத்தி தெரிவித்து வந்ததும், இதற்காக அதிக பணம் வசூலித்து வந்ததும்...
சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி: பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை, செப்.3: சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சூளைமேடு, வீரபாண்டி நகர், 1வது ெதருவில் மாநகராட்சி சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக தண்ணீர் தடையின்றி வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால் அருகே...