செல்போனில் பேசுவதற்கு சென்றபோது விபரீதம் நள்ளிரவில் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு: தந்தையும் இல்லாததால் குழந்தைகள் பரிதவிப்பு
சென்னை, ஜூலை 22: சூளைமேடு வீரமணி பாண்டி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஷர்மிளா (40). தனியார் ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தூங்கிய ஷர்மிளாவுக்கு நள்ளிரவு செல்போன்...
குளத்தில் மூழ்கி மாணவன் பலி
திருவொற்றியூர், ஜூலை 22: மணலி புதுநகர், விச்சூர் பகுதியை சேர்ந்த ரோஹித் ரோஷன் (10), என்ற சிறுவன், அதேபகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள கோயில் குளத்தின் படிக்கட்டில் நின்றிருந்த சிறுவன், எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினான். மாலையில் அவ்வழியே சென்ற...
பெண் மர்ம மரணத்தில் திருப்பம் ரத்த அழுத்தத்தால் இறந்தது தெரிந்தது
அண்ணாநகர், ஜூலை 22: கோயம்பேடு மண்ணடி தெருவில், வாடகை வீட்டில் தனியாக வசித்தவர் தனலட்சுமி (50). பாரிமுனை பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது வீட்டில் நிர்வாண கோலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத...
மின்சார பேருந்தில் பெண் நடத்துனரிடம் பணப்பை திருட்டு
பெரம்பூர்: வியாசர்பாடி சஞ்சய் நகரை சேர்ந்தவர் மீனா (49). வியாசர்பாடி பணிமனையில் இருந்து இயக்கப்படும் தடம் எண் 33 சி, என்ற மின்சார பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு பிராட்வே பகுதியில் இருந்து கவியரசு கண்ணதாசன் நகருக்கு சென்ற பேருந்தில், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த மீனா, தனது...
ராஜிவ்காந்தி சாலையில் திடீர் ராட்சத பள்ளம்
துரைப்பாக்கம்: கழிவுநீர் குழாய் உடைப்பு காரணமாக பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி சாலையில் ஏராளமான ஐ.டி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த சாலையில் அவ்வப்போது திடீர் ராட்சத பள்ளங்கள் ஏற்படுவதால், வாகன...
மக்களிடையே வரவேற்பை தொடர்ந்து கூடுதலாக 36 பூங்காக்களில் நூலகம் அமைக்க முடிவு: மாநகராட்சி தகவல்
சென்னை: வட சென்னை பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த நூலகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சென்னையில் கூடுதலாக 36 பூங்காக்களில் நூலகங்களை விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிப்பு என்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. கட்டுரை, கதை, நாவல்கள் உள்ளிட்டவற்றை செல்போன்களில் ஒலியாகவே கேட்கும் வசதி வந்து விட்டதால்...
பசுமை தீர்ப்பாய எச்சரிக்கையை மீறி எண்ணூர் முகத்துவார ஆற்றில் ஆயில் கழிவு: நிறுவனங்கள் அத்துமீறலால் மீனவர்கள் பாதிப்பு
திருவொற்றியூர், ஜூலை 20: எண்ணூர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், எண்ணூர் முகத்துவார ஆற்றில் இறால், நண்டு, மீன் போன்றவைகளை பிடித்து, வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த முகத்துவார ஆற்றில் எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனத்தின் ஆயில் மற்றும்...
அடமான நகைகளுக்கு வட்டியில்லை எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி வழக்கில் 3 வங்கிகள் பதில் தர வேண்டும்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 20: சென்னை முகப்பேரில் செயல்பட்டு வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் கோல்டு லோன் என்ற நிறுவனம் நகைக் கடன் வழங்குவதாகவும், அடமானம் வைக்கும் நகைகளுக்கு முதல் 12 மாதம் வட்டி இல்லை என்றும் விளம்பரம் செய்திருந்தது. இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தாங்கள் அடமானம் வைத்த...
அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம் வங்கியில் பயங்கர தீவிபத்து : ஆவணங்கள் எரிந்து நாசம்
அம்பத்தூர், ஜூலை 20: அம்பத்தூரில் உள்ள வங்கியில் நேற்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பிரபல தனியார் வங்கி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்ததும் ஊழியர்கள், வங்கியை...