உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கொடுங்கையூர், கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பெரம்பூர், ஜூலை 19: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 34வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஆர்.வி.நகரில் உள்ள பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஆர்.டி.சேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், 34வது வார்டு மாமன்ற உறுப்பினர் சர்மிளா...
சென்னையில் இல்லம்தோறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்கள பணியாளர்களுக்கு ஒத்துழைக்க கலெக்டர் அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 19: சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்திலுள்ள நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில்அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ள முன்களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி, மாற்றுத்திறனாளிகள்...
கோயம்பேடு மார்க்கெட்டில் காரில் வந்து செல்போன் பறிப்பு: 3 பேர் சிக்கினர்
அண்ணாநகர், ஜூலை 18: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (53). இவர், கோயம்பேடு மார்க்கெட் உள்ளே வரும் வாகனங்களுக்கு டோக்கன் போடும் வேலை செய்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், பணியில் இருந்தபோது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி, டோக்கன் போட வேண்டும் என கூறியுள்ளார். அப்போது காரில் இருந்த 3 பேர்,...
ராணுவ இடத்தில் விதிமீறி கட்டிய கோயில் கட்டுமானம் இடிப்பு: பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
ஆலந்தூர், ஜூலை 18: மீனம்பாக்கம் குளத்துமேடு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் கார்டு, மின்சாரம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்றுள்ளனர். இந்த பகுதியில் புதிதாக வீடு கட்டவோ, மாற்றி அமைக்கவோ ராணுவம் தடை...
ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 18: ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் இன்று செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராயபுரம் மண்டலம் எழும்பூர், வேனல்ஸ் சாலையில் கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது....
கொளத்தூர் காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு
பெரம்பூர், ஜூலை 17: திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட புகாரில் முன்னாள் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மாற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து, கொளத்தூர் காவல் துணை ஆணையராக குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, சமூக விரோத செயல்களில்...
மணலியில் ரூ.2.48 கோடியில் சுகாதார மையம், சமுதாயக்கூடம்
திருவொற்றியூர், ஜூலை 17: மணலி மண்டலம் 22வது வார்டு சின்னசேக்காடு பகுதியில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக நவீன சுகாதார மையம் கட்டி தர வேண்டுமென்று வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி கோரிக்கை விடுத்தார். இதற்கான தீர்மானத்தை மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் கொண்டு...
பயணிகள் தவிப்பு சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் திடீர் ரத்து
சென்னை, ஜூலை 17: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.50 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், காலை 7.40 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 1.35 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்ல...
சாலை பள்ளத்தில் பைக் கவிழ்ந்து சென்னை பேராசிரியர் பலி
சென்னை, ஜூலை 16: வேளச்சேரி அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீரா, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர். இதனால் இவருக்கு சாத்தான்குளத்திலும் சொந்த வீடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து...