அரியலூர் மாவட்டத்தில் ரூ. 3.13 கோடியில் வளர்ச்சித்திட்டப்பணிகள்
அரியலூர், ஜூன் 24: அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.46.92 லட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ 3.13 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தலைமைவகித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர்...
இறுதினால் ஜூன் 26ம் தேதி அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்
அரியலூர். ஜூன் 24: ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 26ம் தேதி கடைசிநாள் என்று கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை- ஆதிதிராவிடர் நல ஆணையர் செயல்முறைகள் கடிதத்தின்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அரசு...
அரியலூர் பெரியார் நகரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
அரியலூர், ஜூன் 23: அரியலூர் நகராட்சி பெரியார் நகர் 5வது குறுக்குத் தெருவில் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரியலூர் கல்லூரி சாலையில் பெரியார் நகர் 5வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் சேகரித்து...
அரியலூரில் இந்து முன்னணி, பாரதிய ஜனதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஜூன் 23: அரியலூரில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி பிரச்சார இயக்கத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே சிபிஎம் கட்சி...
ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
ஜெயங்கொண்டம், ஜூன் 23: இது தொடர்பாக ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூர், பெரியகருக்கை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூர், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, மருக்காளங்குறிச்சி, வடுகர்பாளையம், கவரப்பாளையம்,...
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தா.பழூர், ஜூன் 14: அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பள்ளி முடிந்து வீடு...
உழவரை தேடி வேளாண்மை, உழவர் நலத்துறை முகாம்
அரியலூர், ஜூன் 14: திருமானூர் வட்டாரம் மல்லூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முகாம், நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பரமசிவம் கலந்து கொண்டு பேசுகையில்; வேளாண்மை துறை மூலம் தற்போது செயல்படுத்தப்படும் கோடை உழவு மானியம், இயந்திர...
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம்: 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூர், ஜூன் 14: அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர், மாதாந்திர...
அரியலூர் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி முன்வர வேண்டும்
அரியலூர், ஜூன் 13: அரியலூர் நகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் நகராட்சி பெரியார் நகரில் உள்ள தெருக்களில் போடப்பட்ட சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக இருப்பதால், அவ்வழியாக நடந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. மண்...