சாலையோரம் நிறுத்திய பைக்கிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
பேராவூரணி , ஜூலை 14: பேராவூரணியில் சாலை எல்லை கோட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்ட பைக்கிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அம்மையாண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பள்ளிவாசல் அருகில் உள்ள டீக்கடை முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் நெடுஞ்சாலை கோட்டுக்கு வெளியே சிறிது இருந்தது. அங்கு வந்த...
விக்கிரமங்கலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
தா.பழூர், ஜூலை 14: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை வீட்டில் தனியாக இருந்த போது, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சைக்காக ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இது குறித்து...
தா.பழூர் அருகே சொத்து தகராறில் 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
தா.பழூர், ஜூலை 14: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி ராசாத்தி, மகன் அருள்செல்வன். இவர்களுக்கு அதே கிராமத்தில் ஒரு இடம் தொடர்பாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக எதிர் தரப்பினரோடு ஏற்பட்ட மோதல் குறித்து, தா.பழூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது...
தா.பழூரில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தா.பழூர், ஜூலை. 10; அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அரியலூர் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற வேண்டி 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
ஜெயங்கொண்டம், ஜூலை 10: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-விருதாச்சலம் சாலையில் உள்ள தாவூத் பிபி ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான 33 ஏர்ஸ் 82 செண்ட் இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தபோது, உடையார்பாளையம் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது அப்போது 8ம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற...
ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் ரூ.1.38 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள்
ஜெயங்கொண்டம், ஜூலை 10: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி கலெக்டர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது....
பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் அரியலூர் மாணவர் மாநில அளவில் 3ம் இடம் பெற்று அசத்தல்
தா.பழூர், ஜூன் 28: அரியலூர் மாவட்டம் கீழ மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் அமலன் ஆண்டோ. இவர் குழவடையான் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண் எடுத்திருந்தார். இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களுடன் மாணவர் அமலன்...
தா.பழூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம்
தா.பழூர், ஜூன் 28: தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில், பெரியசாமி, ரமேஷ், ராமமூர்த்தி, கரிகாலன், முருகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி மாவட்ட மாநாட்டு பேரணி பற்றியும், ஒன்றிய பொருளாளர் கரிகாலன் அரசியலை...
பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அரியலூர், ஜூன் 28: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்மவிருது வழங்கிட அறிவித்துள்ளது. இது குறித்து கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க...