அரியலூர் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் விவசாயி பலி
தா.பழூர், ஜூலை 17; அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஓரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). விவசாயி. இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இரண்டு சக்கர வாகனத்தில் ஆதனூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது மழவராயநல்லூர் மருதையாற்று பாலம் அருகே சென்ற போது, இவருக்குப் பின்னால் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் (27) என்பவர் ஓட்டி...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வீடு வீடாக சென்று விண்ணப்பம் விநியோகம்
அரியலூர், ஜூலை 17: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வீடு வீடாக சென்று விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் பயன்பெற பொதுமக்களுக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறை சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள்...
அரியலூர் மாவட்டத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
அரியலூர், ஜூலை 17: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறும். நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதன்கிழமையான நேற்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 24 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல்...
குழந்தைகள் திறன் வளர்ப்பு பயிற்சி
அரியலூர், ஜூலை 17: அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி நேற்று நடைபெற்றது. இப்பயிற்சிக்கு, கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். அரசு...
ஒரே இடத்தில் அனைத்து துறைகளின் சேவை பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்களுக்கு வாய்ப்பாக அமையும்
அரியலூர், ஜூலை 16: ஒரே இடத்தில் அனைத்து துறைகளின் சேவை பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்களுக்கு வாய்ப்பாக அமையும். ஒட்டு மொத்த அரசாங்கமும் வீடு தேடி வருகிறது என்று அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் ஆதனக்குறிச்சி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை போக்குவரத்து மற்றும்...
அரியலூர் கலெக்டர் விளக்கம் 2025-2026 ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாம் கட்ட புதிய பாரத எழுத்தறிவு மையங்கள் துவக்கம்
பெரம்பலூர், ஜூலை 16: பெரம்பலூர் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட 66 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 15 வயதிற்கு மேற்பட்ட 1169 எழுத படிக்க தெரியாத கற்போர் களுக்கு தன்னார்வலர்கள் வாயிலாக பயிற்றுவிக்க 2025-2026 ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாம் கட்ட புதிய பாரத எழுத்தறிவு மையங்கள் தொடங்கப்பட்டது. பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட...
குறுவட்ட கைபந்து போட்டியில் மாணவர்கள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளை சரிகட்ட பயிர்களுக்கு காப்பீடு அவசியம்
அரியலூர், ஜூலை 16: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் எதிர்பாராத இழப்பு சரிகட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்வது அவசியம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேளாண் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயி களுக்கு...
அரியலூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்
தா.பழூர், ஜூலை 15: அரியலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா, உள்ளிட்ட காய்ச்சல்கள் மற்றும் கொரோனா உள்ளிட்ட இதர வைரஸ் நோய்களின் ஒழிப்பு...
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 60 சதவீதம் மானியத்தில் களையெடுக்கும் இயந்திரங்கள்
அரியலூர்: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி சந்தை வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு...