அறந்தாங்கி அருகே கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ஆறுதல்
அறந்தாங்கி, ஜூலை 21: அறந்தாங்கி அருகே படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த காரணியாநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பானு என்ற பெண் கடந்த வாரம் வளர்த்து வந்த மாடுகளை கண்மாய் பகுதிக்கு தேடிச் சென்ற போது பாலியல் வன்முறை செய்யப்பட்டு...
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 நாட்கள் விண்ணப்ப முகாம்: வழக்கு தொடரப்படும் எச்சரிக்கை...
வனத்துறையின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக மின்சாரத்தை திருடி, வயல்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மின் வேலி அமைப்பவர்களின் மீது காவல்துறையின் மூலம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மின் இணைப்பில் இருந்து மின்சாரம் திருடப்பட்டு மின் வேலி அமைக்கப்படுகிறதோ, அந்த மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு...
ஜெயங்கொண்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ஜெயங்கொண்டம், ஜூலை 21: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மின்சார உதவி செயற்பொறியாளர் அய்யனார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஜெயங்கொண்டம் கோட்டம் சார்பாக நாளை (22ம் தேதி) காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஜெயங்கொண்டம்...
பொதுமக்களுக்கு மின்வாரியம் ஆலோசனை; சிஎப்டிஐ பயிற்சி மையத்தில் காலணி தொழில்நுட்ப படிப்புகள்
அரியலூர், ஜூலை 21: சிஎப்டிஐ சென்னை பயிற்சி மையம் நடத்தும் காலணி வடிவமைப்பு தொழில்நுட்ப படிப்புகளில் சேர விண்ணப்ப முகாம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின்கீழ்...
செந்துறை ஒன்றியத்தில் ரூ.9.11 கோடியில் 27 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர், ஜூலை 19: அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.9.11 கோடி மதிப்பீட்டில் 27 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு போக்குவரத்துதுறை, மின்துறை அமைச்சர் சா.சி.சிவங்கர் நேற்று குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அரியலூர், ஜூலை 19: அரியலூர் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகிளா விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த தளவாய் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தியூர் கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி மகன் நாராயணசாமி (37). இவர், 14 வயது...
குறிஞ்சான்குளம் பெரியநாயகி அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
அரியலூர், ஜூலை 19: ஆடி முதல் வெள்ளியையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நேற்று நடைபெற்றது. அரியலூர் குறிஞ்சான்குளம் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, ரூ.5 லட்சம் பணத்தாள் அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து...
கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆசிரியர்கள் மறியல்
அரியலூர், ஜூலை 18: அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முதல்...
படியுங்கள் உடையார்பாளையத்தில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
ஜெயங்கொண்டம், ஜூலை 18: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம் பேரூர் கழக இளைஞர் அணி சார்பில், உடையார்பாளையத்தில்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 102 - வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துவேல் ராஜா...