விளை பொருட்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்: ஜெயங்கொண்டம், திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ஜெயங்கொண்டம், ஆக.7: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து 8 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜெயங்கொண்டம் தா.பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள்...
அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஆக. 7: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பேராசிரியர் பணி மேம்பாட்டினை கால தாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும். மூத்த அரசு கல்லூரி பேராசிரியரை...
பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்: 11-வது தேசிய கைத்தறி தினம் அரியலூர் கலெக்டர் வாழ்த்து
அரியலூர், ஆக.6: 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை நாடறியச் செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்...
தற்காப்பு கலையை கற்று கொண்டால் பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல் ஏற்படும்
ஜெயங்கொண்டம், ஆக.6: உடையார்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புபயிற்சி தொடங்கப்பட்டது. நிகழ்வில் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமையேற்று தற்காப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள், உதவி. தலைமை ஆசிரியர் இங்கர்சால் முன்னிலை வகித்தனர். அரசு உத்தரவின்படி மூன்று மாதங்களுக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு மணிநேரம் பயிற்சி...
அரசு இடத்தை தனி நபர் சொந்தம் கொண்டாடும் அவலநிலை பொதுமக்கள், ஆர்டிஓவிடம் புகார்
ஜெயங்கொண்டம், ஆக. 6: உடையார்பாளையத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை போட்ட அரசு இடத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடுவது குறித்து பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ராஜவீதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த வாரம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் பூமி பூஜை போட்டார்....
பெண்ணுக்கு கொலைமிரட்டல் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை: அரியலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு
அரியலூர், ஆக. 2: கருவிடைச்சேரி கிராமத்தில் பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அரியலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டது. அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் அருகே உள்ள கருவிடைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் இளையராஜா(37). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திட்டி, கொலை...
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி அணி கோப்பை வென்றது
ஜெயங்கொண்டம், ஆக.2: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கிரிக்கெட் அணி மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்று முதல்பரிசு பெற்றது. அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டம், மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 29ம் தேதி முதல்...
ஜெயங்கொண்டம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 3 வார்டுகளிலிருந்து 803 மனுக்கள்
ஜெயங்கொண்டம், ஆக.2: ஜெயங்கொண்டம் நகராட்சி 8,9,10வது வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 803 மனுக்கள் பெறப்பட்டது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 8,9,10 வார்டுகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த முகாமினை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பொதுமக்களிடம் 803 கோரிக்கை...
கிரீடு வேளாண் மையம் சார்பில் பயறு சாகுபடி தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஆலோசனை
தா.பழூர், ஆக.1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு பயறு சாகுபடி குறித்த தொழில்நுட்பம் அளிக்கப்பட்டது. இதில் உளுந்து சாகுபடியில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையினால் உளுந்தின் தரம், அளவு மற்றும் எடை சுமார் 10-15% வரை குறையும். உளுந்து சாகுபடியில் பூ உதிர்வது தடுக்கவும்,...