ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ஜெயங்கொண்டம், ஜூலை 30: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் ஆணை படியும், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனதின் முதல்வர் பாலசுப்ரமணியம் செயல்முறைகளின் படியும், அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும் , ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 6 முதல் ஒன்பதாம் வகுப்பு கையாளும் தமிழ்,...
மேலூர் ஊராட்சியில் அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி
ஜெயங்கொண்டம், ஜூலை 30: மேலூர் ஊராட்சியில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலூர் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால்...
கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி: முன்பதிவு செய்ய அழைப்பு
தா.பழூர், ஜூலை 29: கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 4ம் தேதி நடைபெறுவதால் முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரிம் ஒன்றியம், காங்கேயங்குறிச்சி கிராமத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 18 முதல் 35 வரை வயது உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பயிற்சியில்...
உடையார்பாளையத்தில் மனநலம் பாதித்த வாலிபர் மீட்பு
ஜெயங்கொண்டம், ஜூலை 29: உடையார்பாளையம் கடைவீதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த வாலிபரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கடை வீதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் மனநலம் பாதித்து சுற்றிக் கொண்டிருந்தார். அந்த நபரை மீட்ட உடையார்பாளையம் போலீசார் தத்தனூரில் உள்ள அம்மா காப்பகத்தில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை விசாரித்தபோது...
தா.பழூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும்
தா.பழூர், ஜூலை 28: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் மண்டல தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மண்டபத்தை வந்தடைந்தது. ஒன்றிய பொருளாளர் வீரபாண்டியன் வரவேற்றார். அரியலூர் மாவட்ட தலைவர்...
பாடாலூரில் டாஸ்மாக் பார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
பாடாலூர், ஜூலை 28: பாடாலூரில் டாஸ்மாக் பார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (60). அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்ததால் தினமும் இரவு மது...
கிரிக்கெட் மைதானம் அமைக்க அமைச்சரின் சொந்த செலவில் ஏரியை சமன்படுத்தும் பணி
அரியலூர் ஜூலை 28: செந்துறை இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று செந்துறை ஏரியில் தற்காலிக கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணியினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதனால் அமைச்சருக்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் கடந்த மாதம் 24 ஆம் தேதி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க போக்குவரத்து மற்றும் மின்சார...
ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன்கடை அங்கன்வாடி, தார் சாலை அமைத்தல் பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம், ஜூலை 26: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டிடம், தார் சாலை பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் ஒன்றியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-26ன் கீழ், வங்குடி ஊராட்சியில், ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில், சித்தேரி...
ஆடி 2வது வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
அரியலூர், ஜூலை 27: ஆடி 2வது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆடி மாதம் 2வது...