ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன்கடை அங்கன்வாடி, தார் சாலை அமைத்தல் பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம், ஜூலை 26: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டிடம், தார் சாலை பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் ஒன்றியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-26ன் கீழ், வங்குடி ஊராட்சியில், ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில், சித்தேரி...
ஆடி 2வது வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
அரியலூர், ஜூலை 27: ஆடி 2வது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆடி மாதம் 2வது...
கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஜூலை 26: அரியலூரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் அண்ணாசிலை அருகே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர், 16 ஆண்டுகால ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி , 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம...
திருலோகி சுந்தரேஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
திருவிடைமருதூர், ஜூலை 25: திருலோகி சுந்தரேஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. கும்பகோணம் அருகே திருலோகி சுந்தரேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 27 சென்ட் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்ற மனுவிற்கு ஆக்கிரமிப்பு வெளியேற்ற உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்...
அரியலூர் மாவட்டத்தில் தேவாலயங்களை பழுதுபார்க்க புனரமைத்தல் பணிக்கு மானியம்
அரியலூர், ஜூலை 25: அரியலூர் மாவட்டத்தில் தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகைக்கு விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை...
பால்குடம் எடுத்து செல்லும் பக்தர்கள் ஜெயங்கொண்டத்தில் 144 நில ஆர்ஜித வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் உடனடி தீர்வு
ஜெயங்கொண்டம், ஜூலை 25: ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 144 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல் மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணை...
அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி
அரியலூர், ஜூலை 24: அரியலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி செப். 12ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்ட அளவில் ஐந்து பிரிவுகளில் மொத்தமாக 53 வகையான...
விக்கிரமங்கலம் அருகே பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
தா.பழூர், ஜூலை. 24 ; அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் அரசுக்காரன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (55) விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்து (விஷம்)குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்....
குறைந்த மின் அழுத்தத்தை கண்டித்து சாலை மறியல்
அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கோவிலூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள குறைந்தளவு மின் அழுத்தத்தைக் கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவிலூர் கிராமத்தில், கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள குறைந்த மின் அழுத்தம்(லோ வோல்டேஜ்) காரணமாக மின் சாதனம், மோட்டார் பம்ப் போன்றவற்றை இயக்க முடியாமல்,...