அரியலூர் அரசு கல்லூரியில் நாட்டுநல பணித்திட்டநாள் விழா
அரியலூர், செப். 25: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொ) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற தன்னார்வ பணிகளில் ஈடுபடும் போது உங்களுடைய ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். மாணவப் பருவத்தில் கல்வியோடு நீங்கள்...
ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை
ஜெயங்கொண்டம், செப். 25:ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026-ன் கீழ், அழகாபுரம் ஊராட்சி,அகரம் ஆதிதிராவிடர் தெருவில்,ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில்,வடிகால் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைத்தல், ஓலையூர் ஊராட்சி,குடிகாடு மேலத்தெருவில்,குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்...
செப். 27ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர், செப்.25: வரும் செப். 27ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியீட்டுள்ளனர். அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் செப்....
செந்துறையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்
அரியலூர்,செப்.19: செந்துறையில் நாளை (20ம்தேதி) நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா கடந்த 2ம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. நமது அரியலூர் மாவட்டத்தில் வரும் 20ம்தேதி குமிழியம் வட்டாரம்,...
ஒக்கநத்தம் கிராமத்தில் நாய்கள் கடித்து 6 வெள்ளாடுகள் பலி
ஜெயங்கொண்டம், செப்.19: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(40)விவசாயி. இவர் வெள்ளாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று கண்ணன் அவரது விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். பின்னர் விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்த வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த 6 வெள்ளாடுகள் இறந்தது....
திருமானூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி: விவசாயிகள் பங்கேற்பு
ஜெயங்கொண்டம், செப்.19: திருமானூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ேமலாண்மை குறித்த பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் காரைப்பாக்கம் மற்றும் அன்னிமங்கலம் கிராமங்களில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. கிரிடு வேளாண் அறிவியல் மையர் தொழில்நுட்ப வல்லுனர் திருமலை வாசன் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண்வளத்தை மேம்படுத்த மண் பரிசோதனை செய்து...
ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்
ஜெயங்கொண்டம், செப்.18: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ”தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மை கீழடி அகழாய்வு ஒரு சிறப்புப் பார்வை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வடிவேலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் ராசமூர்த்தி தலைமை வகித்து பேசினார். அரியலூர் அரசு கலைக்கல்லூரி பணிநிறைவுபெற்ற...
காய்கறி பயிர்களில் தேமோர் கரைசல் பயன்பாடு தொழில்நுட்பம்
தா.பழூர், செப். 18: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் காய்கறி பயிர்களில் பயன்படுத்தப்படும் தேமோர் கரைசல் எவ்வாறு தயாரித்து, பயன்படுத்த வேண்டும் என தொழில்நுட்ப வழிமுறைகள் வழங்கி உள்ளனர். தேமோர் கரைசல் தயாரிக்க, ஐந்து லிட்டர் புளித்த மோர் மற்றும் இரண்டு லிட்டர் தேங்காய் பால்...
மழையில் நனைந்த மக்காச்சோளம் சாலையில் உலர்த்தும் பணியில் விவசாயிகள்
தா.பழூர், செப். 18: அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயந்திரம் மூலம் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விதைக்கப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்காச்சோள அறுவடை பணிகளானது சுத்தமல்லி, நடுவலூர், காசாங்கோட்டை, கோட்டியால்,...