குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
* உடைத்து வைத்த தேங்காய் காய்ந்துபோய் விட்டால், அந்த தேங்காய் மூடியில் பாலை ஊற்றி பத்து நிமிடம் வைத்திருந்து பின்பு தேங்காயை உபயோகித்தால் புதியது போல இருக்கும். * ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி பாதியை உபயோகித்து விட்டு மீதி பாதியை அடுத்த நாள் உபயோகிக்க வேண்டுமானால் பாதி எலுமிச்சைப் பழத்தின்மீது உப்பைத்...
‘‘சைனஸ்’’ கவனம் ப்ளீஸ்
மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இதற்கு பெயர்தான் சைனஸ். மூக்கின் உட்புறமாகப் புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ள சைனஸ் - ஃபிரான்டல் சைனஸ். மூக்குக்கு இரு புறமும் கன்னத்தில் உள்ள சைனஸ் - மேக்ஸிலரி சைனஸ். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது - எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை...
சிதாரே ஜமீன் பர் !
‘‘அவரவருக்கு அவரவர் வாழ்க்கை சாதாரணம்தான்''… இந்த ஒரு கருவை கையில் எடுத்துக்கொண்டு மிக அற்புதமான படம்/பாடம் கொடுத்திருக்கிறார் ஆமிர் கான். எந்த இந்திய ஸ்டார் கிரீடமும் இல்லாமல், தன்னைத் தாழ்த்திக் கொண்டு சக மனிதராக ஒரு படம் கொடுத்திருக்கும் ஆமிர்கானுக்கு பாராட்டுகள். விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ படங்களை நம் இந்திய சினிமா கடந்து...
அழகுக்கலை, ஃபேஷன், ஹோட்டல்…பெண் நிபுணர்களை ஏன் வாடிக்கையாளர்கள் நம்புவதில்லை?!
உணவு, அழகுக்கலை, ஃபேஷன் போன்ற துறைகள் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பத்திற்கு மிக நெருக்கமானவை என்றாலும், இந்தத் துறைகளில் இன்னமும் பெண்களை விட ஆண்களே திறமைசாலிகளாகவும், பெண்களும் ஆண்களையே அதிகம் நம்பும் மனநிலையும் நீடிப் பதன் பின்னணி என்ன? குறிப்பாக ஹேர்கட், தையல், இவற்றில் பெண் நிபுணர்கள் குறைவே அல்லது இல்லவே இல்லை. இதற்கு முக்கியக்...
பெண்களுக்கான பிரத்யேக யோகாவை வடிவமைத்து வருகிறேன் : யோகா ஆசிரியர் மதுரா ராஜகோபாலன்!
இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளவர்கள் என்னிடம் ஆன்லைன் மூலமாக ஆர்வமுடன் யோகா கற்றுக்கொள்கிறார்கள் என பெருமிதமாக சொல்கிறார் சென்னை சிறுசேரியில் வசிக்கும் யோகா ஆசிரியர் மதுரா. யோகாவினை முறையாக படித்து பட்டங்கள் பெற்று, தனது பதினைந்து வருட அனுபவத்தில் பலருக்கும் யோகா கற்று கொடுக்கிறார் மதுரா ராஜகோபாலன். நிறைய கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள்,...
அறிவை விரிவடைய செய்! வெற்றி வாகை சூடு!
ஆஸ்திரேலியக் கடலோரம் பவழப்பாறைகள் இருக்கின்றன. அந்தப் பாறைகளின் ஒரு பக்கம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லாமல், சலனமற்று இருக்கும். பார்ப்பதற்குத் தான் அமைதியாகத் தெரியும். ஆனால் நிறமற்று, பொலிவற்றுக் காணப்படும். மறுபக்கத்திலோ ஓயாமல் அலைகள் மோதிக்கொண்டிருக்கும். அலைகள் மோதும் பக்கத்தில் உள்ள பவழப்பாறைகள் அழகாய் வண்ணமுறக் காட்சியளிக்கும். பிரச்னை இல்லாத வாழ்க்கை, பிரச்னைகளுடன் கூடிய வாழ்க்கை இவற்றிடையே...
குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
*பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவைப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். பாத்திரமும் சுலபமாகச் சுத்தமாகும். * சமையலுக்கு சில சொட்டு மட்டுமே எலுமிச்சைச் சாறு தேவையென்றால் பழத்தை நறுக்காமல் கனமான ஊசியால் துளையிட்டு சில சொட்டுகள் எடுத்துவிட்டு பழத்தை அப்படியே வைத்தாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். * மிக்ஸியில் அரைக்கும் பொருட்கள் குறைவாக இருந்தால்...
அழாதே பாப்பா!
குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது அதன் அழுகையை சமாளிப்பதுதான். இன்று பல பெற்றோர்கள் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு பதிலாக அவர்கள் மன அழுத்த நிலைக்குச் சென்று விடுகிறார்கள். குழந்தை ஏன் அழுகிறது? எதனால் அழுகிறது என்பதை கண்டு பிடிக்க மிகவும் கடினம் என்றாலும் குழந்தையின் செய்கைகளிலிருந்து கண்டு பிடிக்கலாம். சும்மா இருக்கும் குழந்தை திடீரென்று அழுதால்...
பிளான்டிக்ஸ்!
விவசாயிகளுக்கான ஸ்மார்ட் தோழனாக செயல்படுகிறது பிளான்டிக்ஸ் செயலி Plantix - Your Crop Doctor) என்பது விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்தர வேளாண் உதவிச் செயலி. இந்த செயலி Android, iOS இரண்டிலும் கிடைக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்த செயலி, இந்திய விவசாயிகளிடையே தீவிரமாகப் பரவி வருகிறது. மேலும் இது வீட்டுத் தோட்டம், காய்கறிகள்...