`ஸ்விட்ச், குழாய், எங்கும் எதிலும் தங்கம் தான் :24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த வரிசையில் மத்திய பிரதேசம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரியம் சரஸ்வத் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த...
32 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னையில் இன்று இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். ...
தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து : 41 பேர் பலி!!
ஹைதராபாத் : தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது நேற்று திடீரென்று பாய்லர் வெடித்தது. 41 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...
தமிழ்நாட்டில் முதல் முறையாக மின்சார பேருந்துகள் சேவை!!
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ரூ.207.90 கோடி மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ...
தாய்லாந்து பிரதமர் பதவி விலகக் கோரி பாங்காக்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடி, பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, கம்போடிய முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடனான தொலைபேசி அழைப்பு பகிரங்கப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...
பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு ...
வெளுத்து வாங்கிய கனமழை.. வெள்ளக்காடான சீனா: மீட்பு பணிகள் தீவிரம்!!
சீனாவில் ஹூனான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளன. மத்திய சீனா மற்றும் தென்மேற்கு சீனாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஹுனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் லிசூய் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ...
பெருவில் நடைபெற்ற இன்கா பழங்குடியினரின் பாரம்பரியத் திருவிழா..!!
தென் அமெரிக்க நாடான பெருவில் இன்கா பழங்குடியின சமூகத்தினரின் சூரியனுக்கு மரியாதை செலுத்தும் பாரம்பரிய ஆண்டு விழா வண்ணமயமாக நடைபெற்றது. பெருவின் கஸ்கோ நகரத்தில் உள்ளது வரலாற்று புகழ்மிக்க சஸ்கா யுவாமா தொல்பொருள் தளம். இன்கா பழங்குடியினரின் சூரிய வழிபாடு ஆண்டு விழாவையொட்டி இப்பகுதி முழுவதும் களைகட்டி இருந்தது. இன்டி ரோமி என்று அழைக்கப்படும் இந்த...
வரலாறு படைக்கும் சுபான்ஷு சுக்லா : ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு பயணம்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து ஆக்ஷியம் விண்வெளி திட்டத்தின் கீழ், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர். ...