எந்தெந்த காலங்களில் சிவ தரிசனம் செய்யலாம்?
?பலிபீடம் ஏன் இருக்கிறது? அதன் தேவை என்ன? - சரண்யாகுமரன், தாம்பரம். பலிபீடம் என்பது ஆலயத்தின் நுழைவில் கொடிமரத்திற்கு முன்புறம் அமைந்திருக்கும். இங்கே வழிபாட்டின் போது தேவதைகளுக்கான ``அவி’’ அதாவது நிவேதனம் சாதிப்பார்கள். இது பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் இருக்கும். மூன்று அடுக்கு அமைந்து அதன் மேல் புறம் தாமரை மலர் போல விரிந்தபடி இந்த...
மனனம் எனும் மகாசக்தி
நமது ஞான மரபில் சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்று மூன்று விஷயங்களை சொல்வார்கள். இந்த மூன்றும் உங்களின் ஆன்மிக வாழ்க்கையில் முக்கியமானவையாகும். அதில் முதலாவதாக சிரவணம் என்பது முதலில் காதால் குருவின் சொற்களை கேட்டல் என்று இங்கே எடுத்துக் கொள்வோம். அல்லது வாழ்வினைக் குறித்த தேடலில் உள்ளோர் அது குறித்த பழமையான நூல்களையும் குருமார்களின் சொற்களையும்...
யோக மார்க்கத்தை அருளும் நாமம்
குலாம்ருதைக ரஸிகா குலஸங்கேத பாலிநீ நாம் இனி இரண்டிரண்டு நாமங்களாகவோ அல்லது மும்மூன்று நாமங்களாகவோ சேர்த்து சேர்த்துத்தான் பார்க்கப் போகிறோம். இந்த நாமங்களை பார்க்கும்போது முன்னுரையாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் அம்பிகையினுடைய ஸ்தூல ரூபம் பார்த்தோம். பிறகு ஸ்தூல ரூபத்திலிருந்து பண்டாசுர யுத்தம் பார்த்தோம். பண்டாசுரனை அம்பிகை ஜெயித்தபோது சூட்சும ரூபத்தை...
மகிமைகள் நிறைந்த மச்சாவரம்
33வது அனுமனாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா அருகே ``மச்சாவரம்’’ என்னும் பகுதியில் உள்ள ``தாசாஞ்ஜநேயரை’’ காணவிருக்கிறோம். தேவராயர்களின் சாம்ராஜ்யம் ஆந்திரமாநிலம், அனுமன் கோயிலுக்கு பெயர் போன மாநிலமாகும். அனுமன் கோயில் இல்லாத கிராமமே இல்லை என்று சொன்னால், அது மிகையாகாது. குறிப்பாக, விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்குப் பிறகு, தற்போதைய ஆந்திரப் பிரதேசம் முழுவதும் அனுமன்...
நெற்பயிரை காவல் காத்த ‘நெல்லையம்மன்’
சிவகங்கையிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலூரில் பழமையான கொற்றவாளீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக கொற்றவாளீஸ்வரர் என அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். தாயார் நெல்லையம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ரிஷப வாகனத்தில் பார்வதி சமேத சிவபெருமான், மயில் மீது சண்முகர், வீணையுடன் சரஸ்வதி, சாரதாம்பிகை, நடராஜர், வீரசேகர பாண்டியன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. கோயிலின்...
எல்லா கிரக தோஷங்களும் நிவர்த்தியாக தினசரி வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்?
?ஆலயங்களில் மூலவரைத்தவிர, பிராகாரங்களில் என்னென்ன தெய்வங்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? மூலவரை மட்டும் வழிபட்டால் போதுமா? - கே. பிரபாவதி. மேலகிருஷ்ணன் புதூர். ஆலயங்களில் மூலவரைச் சுற்றி, அந்தந்தத் தெய்வங்களுக்கு உண்டான ஆகமங்களில் சொல்லப்பட்டபடி, சுற்றுப்புறத் தெய்வங்கள் - கோஷ்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். முதலில் இவர்களை எல்லாம் வலம்வந்து தரிசித்து, அதன் பிறகே மூலவரின்...
வேகமாகவே காணாமல் போகும் வேகம்!
ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, ‘‘நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே?’’ தென்னங்கன்று சொன்னது, ‘‘ஒரு வருஷம்’’. ‘‘ஒரு வருஷம்னு சொல்றே, ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா?’’ கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை...
சிக்கல் தீர்க்கும்சிக்கல் சிங்காரவேலவர்
ஒரு பஞ்ச காலத்தில், உண்ண உணவில்லாத நிலையில், மாமிசத்தைத் தின்றதால் தேவலோகப் பசுவான காமதேனு, ஈசன் சாபத்தால் புலி முகம் பெற்றது. அந்த சாபத்தை காமதேனு நிவர்த்தி செய்து கொண்ட தலம், சிக்கல். ‘‘அந்த பால் குளத்திலிருந்து வசிஷ்டர் வெண்ணெய் எடுத்து சிவலிங்கத்தை உருவாக்கி பூஜித்தார். பின் அதை அகற்ற முற்பட்டபோது, லிங்கம் பூமியில் சிக்கிக்...
பொருள் செல்வமும் அருள் செல்வமும்...
மனிதப் பிறவியின் நோக்கம் மறுபடியும் இந்த உலகத்தில் பிறப்பதல்ல, பிறவாப் பேரின்ப நிலை பெறுவதே என்பது சான்றோர்கள் கொள்கை. பிறவாத நிலை அடைவதற்காகவே இந்தப் பிறப்பு நிலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன் மிகத்தின் அடிப்படை. அனேகமாக எல்லாச் சமயக் கொள்கைகளும் இதைச் சார்ந்து தான் இருக்கின்றன. இறைவனை பிறவாநிலை தரும் பெம்மான் என்றே போற்றுகின்றனர். தொண்டரடிப்பொடியாழ்வார்...