வசதியான வாழ்க்கை தரும் மகேந்திரப் பொருத்தம்
இல்லற வாழ்வினை ஏற்கும் முன்னரே பொருத்தங்களை சரியானபடி பார்த்துவிடுதல் நல்லது. வெளி நபர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத சில சூட்சுமமான விஷயங்களையும் இதன்மூலம் சரிசெய்துவிடலாம். ‘சரி, இந்த இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தால் பிரச்னைகளை சுமுகமாகவே தீர்த்துக் கொள்வார்கள்’ என்று நம்பலாம். ‘பையனை நல்ல பள்ளியில் சேர்க்கலாம்; கேட்டதையெல்லாம் கூட வாங்கித் தந்துவிடலாம்; ஆனால், படிக்க...
இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்
‘சரியான ஜோடி. ஜாடிக்கேத்த மூடி’’ என்று கல்யாண வீட்டிற்குச் சென்று திரும்புவோர் வழக்கமாகச் சொல்வார்கள். இது தோற்றப் பொருத்தமும், வசதிப் பொருத்தமும் பார்த்துச் சொல்வது. இதில் தவறில்லை. ஆனால், அதையும்விட முக்கியம், அவர்களை ஆள்கின்ற நட்சத்திரங்கள் பொருத்தமாக உள்ளனவா என்று பார்ப்பது! இதுவே இல்லற வாழ்க்கையை சிறப்பாக்கும். இந்த விஷயத்தில் ஜோதிடமும் பெண்களை மையப்படுத்தித்தான் பொருத்தங்களையே...
திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?
திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன? - பார்கவி, ராமநாதபுரம். சூரிய குலத்து அரசர் திரிசங்கு. அவர் உடம்போடு சொர்க்கம் போக விரும்பி, குல குருவான வசிஷ்டரிடம் சொல்லி அதற்கு உண்டானவைகளைச் செய்யச் சொன்னார். ‘‘அது சுலபமல்ல; நடக்காது’’ என அறிவுரை சொன்னார் வசிஷ்டர். அதனால் வசிஷ்டரிடம் கோபம் கொண்ட திரிசங்கு, அவரை அவமானப் படுத்தி சாபம்...
மனசுக் கேற்ற வாழ்க்கைத்துணை அமையச் செய்யும் பொருத்தம்
ராசிப் பொருத்தம் பார்த்துவிட்டு, அடுத்து ராசிக்குரிய அதிபதிகள் பொருந்துகிறார்களா என்று பார்க்க வேண்டும். இதைத்தான் ராசியாதிபதி பொருத்தம் என்பார்கள். ‘‘எங்க வீட்ல இருக்கறவங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லீங்க. ஆனா, எங்க வீட்டுக்காரருதான் எல்லாத்தையும் முடிவு பண்ணுவாரு’’ என்று சொல்வார்கள் அல்லவா... அதுபோலத்தான் இதுவும்! ராசிகள் தங்களுக்குள் ஒத்துப் போனாலும், அந்த ராசிக்குரிய அதிபதிகள், அந்த வீட்டிற்குரிய...
அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம்
பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்களின் கவனத்திற்கு திருமண பொருத்தம் பார்க்கும் போது, நீங்கள் தற்போதைய புகைப்படத்தை உபயோகிப்பீர்களா அல்லது உங்களுடைய சிறு வயது (குழந்தை) புகைப்படத்தை உபயோகிப்பீர்களா? தற்போதைய புகைப்படத்தை உபயோகிப்பீர்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கானதுதான். ஆயிரம் காலத்துப் பயிர் திருமண பொருத்தம் எதற்காக பார்க்க வேண்டும்? ஏன் திருமணத்தை ஆயிரங்காலத்து பயிர் என்று...
நிஷ்கல யோகம் என்னும் புதையல் யோகம்
நிஷ்கல யோகம் என்ற புதையல் யோகம் என்பது மிகவும் சிறப்பானதாக சொல்லப் படுகிறது. இந்த யோகம் மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் பொருட்களினால் மட்டும் உண்டாகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். சில நேரங்களில், லாட்டரி சீட்டுகளின் வழியாக மிகப் பெரும் தனத்தை பெறுவதும், குதிரைப் பந்தயம், ரேஸ், ஒருவரிடம் போட்டிக்காக பணம் கட்டுவது தொடர்பாகவும், ஒரு...
நீண்ட ஆயுளோடு நிறைவான வாழ்க்கை :ஜோதிட ரகசியங்கள்
ஒரு ஜாதகத்தில் ஆயுள் பாவம் முக்கியம். அது நீண்ட ஆயுளா, மத்திம ஆயுளா, குறுகிய ஆயுளா என்பதை முதலில் பார்க்க வேண்டும். வேதம் ஒவ்வொரு மனிதனுக்கும் 100 வயது நிர்ணயம் செய்திருக்கிறது. ‘‘வேதநூல் பிராயம் நூறு” என்ற ஆழ்வார் பாசுரமும் இதை வழிமொழிகிறது. திருமண பொருத்தம் பார்க்கும் பொழுதும், முதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயுள்...
?வாஸ்து எந்திரம் என்றால் என்ன? அதை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?
- ஜி.எஸ்.கிருஷ்ணன். அது எந்திரம் அல்ல. ``யந்த்ரம்’’ என்று அழைக்கப்படும் செப்புத்தகடு. ஒரு செப்புத்தகட்டில் வாஸ்து தேவதைக்கான லட்சணங்களோடு ஒரு வரைபடத்தினை பொறித்திருப்பார்கள். அந்த செப்புத்தகட்டை 48 நாட்கள் வாஸ்துவின் மூல மந்த்ரம் ஜபித்து நன்றாக உருவேற்றி இருப்பார்கள். அதனை வியாபாரத் தலங்களிலோ அல்லது வீட்டிலோ வைத்து பூஜிக்கும்போது வாஸ்து தோஷம் என்பது அந்த இடத்தில்...
உலகியல் ஜோதிடம் உணர்த்துவது என்ன?
ஒரே நேரத்தில் ஒரே நாளில் வெவ்வேறு ஊர்களில் பிறந்தவர்களின் காலப் பலன்கள் ஒன்றாக இருக்கும் என பலர் நம்புகிறார்கள். ஆனால், பலன் அப்படி இருக்காது. இவர்கள் ஜனனம் செய்த ஊர்களுக்கு தகுந்தாற்போல அவர்களின் பயணமும், வாழ்க்கை முறையும், சிந்தனைகளும் வெவ்வேறாக இருக்கும் என்பது உண்மை. இடம் மாறும் பட்சத்தில், மற்ற கிரகங்களின் இயக்கங்களும் மாறுபடுகிறது....