சுக்கிர தசை உங்கள் வாழ்வை உயர்த்துமா?
ஓவர் பணம், காசு, பட்டம், பதவி, வீடு, வண்டி, என்று சடசட வென்று முன்னேறிவிட்டார் என்றால்,`அவருக்கு என்ன சார், சுக்கிர தசை அடித்து தூக்கிவிட்டது’’ என்று நாம் சொல்வது வழக்கம். அதேபோல, ஒருவர் மிகுந்த கஷ்டப்படுகின்றார். எடுத்ததெல்லாம் தோல்வி. தொடர் கஷ்டங்களாலே அவர் சங்கடப் படுகின்ற பொழுது, ``சனி தசை வாட்டுகின்றது’’ என்று சொல்வார்....
ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே!
ஏகாதசி விரத மகிமை மார்கழி மாதமானது உத்திராயணம் என்கின்ற தேவர்களின் பகல் பொழுது காலத்தின் துவக்ககாலமாக அதாவது உத்தராயணத்தின் பிரம்ம முகூர்த்த காலம். அது வழிபாட்டுக்குரிய நேரம் என்பதால் மாதங்களில் நான் மார் கழியாக இருக்கின்றேன் என்று பகவான் கண்ணன் கீதையில் மகிழ்ந்துரை செய்தார். மார்கழி மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. தேய்பிறை ஏகாதசிக்கு...
வைகுண்ட ஏகாதசியும் தானங்களும்
மகாவிஷ்ணுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்துச் சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டு, அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக அருளினார். மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி, மார்கழி மாதம் தேவர்களுக்கு...
வாழ்வில் அதிசயம் மலர அனுமன் சாலிசா
பக்த துளசிதாசரால் 40நாட்கள் சிறைச் சாலையில் இருந்த போது, இயற்றி பாடியது ``அனுமன் சாலிசா’’. துளசிதாசர், அவாதி என்ற மொழியில் இந்த நாற்பது பாடல்களை பாடினார். இதன் பின்னணியை அறிவோம். ஒருசமயம் முகலாய மன்னரை சென்று பார்த்தார். அப்போது ராமரின் பெருமையைகூறி அவருடைய தரிசனம் பற்றியும் கூறினார். மன்னர் உடனே, ``அப்படியானால் எனக்கு ராமரை தரிசனம்...
உள்ளத்தை கவரும் மார்கழி திங்கள்
மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதியான குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசனாகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள்....
மார்கழி மாதமும் பரங்கிப்பூவும்!
மார்கழி மாதத்தை பீடை மாதம் எனக் கூறுவர். அதேசமயம் நிரந்தர வாசம் செய்ய லட்சுமியை அழைப்பது எப்படி? 365 நாட்களும் வாசல் தெளித்து கோலம் போடுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதில் மார்கழி மாதம் முப்பது நாட்கள் மட்டும் வாசல் மொழுகி கோலம் போட்டு அதில் பரங்கிப் பூ வைப்பதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார்கள்.சிலர் கோலத்தின்...
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள்
திருமங்கை ஆழ்வார் தமது திருக்குறுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்தில் ஒரு பாசுரத்தைப் பாடுகின்றார். அதில், நிரந்தர ஆனந்தத்தைத் தருகின்ற எம்பெருமான் திருவருளை விட்டுவிட்டு, இந்த உலகியல் பொருட்களைத் தேடி, ஓடி, சலித்து, ஓய்ந்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட அற்புதமான மனிதப் பிறவியை வீணாக்கி விடுகிறார்கள் என்று மனம் நொந்து பாடுகின்றார். வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற,...
யோகம் உணர்த்தும் குத்துவிளக்கு
தாமரையைக் கலைஞர்களும், கவிஞர்களும், சிற்பிகளும், தத்துவஞானிகளும் திருவிளக்கைப் போற்றுகிறார்கள். ‘‘மங்களகரமான குத்துவிளக்கில், மாபெரும் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. அதன் அடிப்பாகமாகிய தாமரை போன்ற ஆசனம் (பாதம்) பிரம்மாவாகவும் அதன் நெடிய தண்டானது திருமால் ஆகவும், நெய் ஏந்தும் அகல் ருத்ரனாகவும், திரிமுகைகள் மகேஸ்வரனாகவும், எல்லாவற்றிற்கும் சிகரமாக உள்ள நுனிப் பாகம் சதாசிவனாகவும், நெய்யானது நாதமாகவும், திரி பிந்துவாகவும்,...
ஜோதிட கணிப்புகளில் மதில்மேல் பூனை
ஜோதிட கணிப்புகளில் மதில்மேல் பூனை அமைப்பு உண்டு. அது தீர்க்கமான முடிவைத் தராது. பொதுவாகவே ஜோதிடப் பலனை யோசித்து சீர்தூக்கிப் பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கும். லக்னம், ராசி சிக்கல்கள் இல்லாத ஜாதகங்களுக்கே முடிவுகள் எடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கும். அதில் மதில்மேல் பூனையாக உள்ள சில ஜாதக அமைப்புகள் இன்னும் குழப்பத்தை அதிகப்படுத்தும். அது...