கோடையில் பீர் மோகம் விற்பனை அதிகரிப்பு ;உடலுக்கு நல்லதா: மருத்துவர்கள் விளக்கம்
கடந்த சில ஆண்டுகளாகவே புவி வெப்பமடைதல் காரணமாக மழைக் காலங்களில் ஒரு மாதம் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்க்கிறது. மேலும் கோடை காலங்களில் அதிகப்படியான வெப்பம் அதிகரித்து மக்களை திக்குமுக்காட செய்கிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை கோடைகாலம் என்றால் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் மட்டுமே வெயிலின்...
அமைச்சர்கள் எம்எல்ஏக்களை வீழ்த்திய ஹனி டிராப் அஸ்திரம்: 48 பேரின் ஆபாச சிடி... ஆட்டம் காணும் கர்நாடக அரசியல்...
ஹனி டிராப் என்ற சொல் தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டுமில்லாமல் தேசியளவில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தையாக உள்ளது. அரசியல், பதவி, பணம் அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக காதல் அல்லது பாலியல் வலையை வீச பயன்படுத்தப்படுகிறது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூகத்தில் சிறந்த நிலையில் உள்ளவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரமாக...
கடலூர், தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான தளம்: 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு
2025- 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிட ‘தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025’ ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம், கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடு...
கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நனவாக்க புதிய காலணி தொழிற்சாலைகள்: மேலூர், கடலூரில் அமைகிறது
மதுரை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் கூடிய வகையில், போதுமான அளவில் சிப்காட் தொழில் பூங்காக்கள் இல்லையே என்ற பலரின் நீண்டகால ஏக்கத்தை போக்கிடும் வகையில் மிக பிரமாண்டமான முறையில் சிப்காட் தொழில் பூங்கா மதுரை மாவட்டத்தில் அமைகிறது. இங்கு தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைகிறது. இதற்கான அறிவிப்பு...
30 ஆண்டுகளாக திருத்தப்படாத பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத் திருத்தத்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த வடக்கு மண்டல போலீசார்: தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு
* சிறப்பு செய்தி கடந்த முப்பது ஆண்டுகளாக திருத்தப்படாத பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் திருத்தியுள்ளது. இந்த சட்டத்தை வடக்கு மண்டல போலீசார் அமல்படுத்தியதால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெண்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ‘‘பருவம் பார்த்து பயிர்செய்” என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் 1998...
17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டம் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை முடக்கியுள்ள ஒன்றிய அரசு: இந்த ஆண்டாவது மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.266...
மேற்கு மாவட்டங்கள் வளர்ச்சிக்காக அதிவேக ரயில் போக்குவரத்து சேவை: மாஸ்டர் பிளான் போடும் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாக 3 வழித்தடங்கள் தேர்வு, மெட்ரோ மூலம் ஆய்வு
தமிழ்நாட்டின் தொழில் வளம் மிக்க மாவட்டங்களாக மேற்கு மாவட்டங்கள் என்றழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் விளங்கி வருகிறது. இம்மாவட்டங்களில் ஜவுளி, மோட்டார், எலக்ட்ரிக்கல் தொழில், வெள்ளி, சேகோ, கொசுவலை, கயிறு ஆலைகள் ஏராளம் இருக்கின்றன. இந்த தொழில்களை பெருக்கி வளமிக்க மாவட்டங்களாக மாற்றி, மாநில அரசுக்கு மிக அதிகப்படியான வருவாயை வழங்கிடும் வகையில்...
இந்தியாவிலேயே சண்டிகருக்கு அடுத்து கோவையில்... செமி கண்டக்டர் பூங்காக்களால் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு: பொருளாதாரமும் மேம்படும் என தொழில் துறையினர் நம்பிக்கை
கோவை அருகே செமிகண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படுவதால், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் மேம்படும் என தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கோவை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக சூலூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர்...
சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்: வானில் ‘பறக்க’ போகும் வறட்சி மாவட்டம்; மீன்பிடி தொழில் மேம்படும்; ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் ; தென் தமிழகத்துக்கு ஜாக்பாட்; மக்கள் உற்சாகம்
வரலாற்று சிறப்புமிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கியமானதாக உலக புகழ்பெற்ற ஆன்மிக புண்ணிய தலமான ராமேஸ்வரம் விளங்குகிறது. வியக்க வைக்கும் கட்டிட கலைகள், சிற்பங்களுடன் கூடிய தேசிய சுற்றுலாதலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கும், அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட கோயிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடவும் பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து...