கூட்டணி உறுதியாக ஒற்றை நிபந்தனை; அண்ணாமலையை தூக்கி கடாசுவதில் எடப்பாடி குறியாக இருப்பது ஏன்? நினைத்ததை சாதிக்குமா அதிமுக
அதிமுக தயவில் எம்எல்ஏவான பாஜ தலைவர்கள் கூட, தங்கள் சுய பலத்தில் ஜெயித்து விட்டதாகவே கர்வம் கொண்டிருந்தனர். தொடர்ந்து திமுகவை மட்டும விமர்சித்து வந்த அண்ணாமலை, அதிமுக மீதும் விமர்சனம் செய்தது கூட்டணிக்கு சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு அரசியல் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களையும் கருத்துக்களையும் பகிரங்கமாக முன்வைத்து வந்த அவர்,...
டிரம்ப் அதிரடியால் அதிர்ந்து நிற்கும் நாடுகள்: தொடங்கி விட்டது உலக வர்த்தக போர்: அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆபத்தாக முடியும் அபாயம்
* அடுத்தடுத்த வரிவிதிப்பால் ஆட்டம் காணும் பொருளாதாரம் 2வது முறையாக வெற்றி பெற்று, அமெரிக்காவின் 47வது அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார் டொனால்டு டிரம்ப். அடுத்த இரண்டே வாரங்களில் எண்ணற்ற கொள்கை மாற்றங்களை அதிரடியாக அறிவித்தார். டிரம்ப் மீண்டும் அதிபரானால் பொற்காலமாக இருக்கும் என கனவு கண்ட, ஆதரவு தந்த இந்தியர்களும் ஆடிப்போகும்...
மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம்: விவசாய சந்தை மதிப்பு கூடும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலப்பகுதி உள்ளது. இப்பகுதியை சுற்றிலும் 740 ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளும் அமைந்துள்ளன. இங்குள்ள சதுப்பு நிலப்பகுதியில் தான் பக்கிங்காம் கால்வாயும் இடம்பெற்றுள்ளது. இந்த கால்வாய் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூனிமேடு பகுதியில் ஆரம்பமாகி ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்...
தமிழ்நாட்டின் நகரங்களில் அதிகரிப்பு: கால்நடைகளின் மேய்ச்சல் நிலமான பிளாஸ்டிக் கழிவுகள்; பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல், உடனடி நடவடிக்கை தேவை
இந்தியா அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது. பெரிய நகரங்களில் மோசமான கழிவுப் பிரிப்பு மற்றும் போதுமான மறுசுழற்சி இல்லாததால் குப்பை கிடங்குகளில் பிளாஸ்டிக் குவிந்து, சுற்றுச்சூழலுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு கால்நடைகளைக் கொண்ட நகரங்களில் சரியான மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால், விலங்குகள் கழிவுகளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளன....
கழிப்பறையில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பு; 10 நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும்: மருத்துவர்கள் எச்சரிக்கை
கடந்த காலங்களில் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் மட்டும் கழிவறைகளை பயன்படுத்தி வந்தனர். திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, இப்போது கிராமம், நகரம் என்ற பாகுபாடு இன்றி வசதிக்கு ஏற்றார்போல் வீட்டில் கழிவறை அமைத்து வருகின்றனர். செல்போன் பயன்பாடு தற்போது மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. கழிவறைக்கு...
இஸ்தான்புல் மேயர் கைதால் வெடித்தது போராட்டம்; துருக்கியில் என்ன தான் நடக்கிறது?
* வீதிதோறும் தன்னெழுச்சியாக குவியும் மக்கள் n அடக்க முடியாமல் தவிக்கும் அதிபர் எர்டோகன் n 2028 தேர்தலை குறிவைத்து அடக்குமுறையா? 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தற்போதைய அதிபர் எர்டோகன் அறிவித்து விட்டார். ஆனாலும் அதிபர் எர்டோகனுக்கு எதிராக வீதிவீதியாக மக்கள் களம் இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் ஒரே ஒரு...
கேட்ட உடனே கிடைக்கும்; மானம் காற்றில் பறக்கும்: காவு வாங்கும் கடன் செயலிகள்
தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (47); தனியார் தொழில் நுட்ப நிறுவன மேலாளர். வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்று சொந்த வீடு வாங்கினார். பின்னர், அவசர தேவைகளுக்காக சில மொபைல் ஆப்ஸ்கள் மூலம் ₹10 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். தவணைத் தொகை மாத சம்பளத்தையும் தாண்டி விட்டது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல்...
75 வயதாகும் மூத்த தலைவர்களுக்கு ஓய்வு; பாஜவின் இரட்டை நிலைப்பாடு: அத்வானி, ஜோஷிக்கு ஒரு நியாயம்; மோடிக்கு பொருந்துமா?
வரும் செப்டம்பரில் மோடி ஓய்வு பெறப் போவதாக பேசப்படும் நிலையில் 75 வயதாகும் தலைவர்களை ஓரங்கட்டுவதில் பாஜ இரட்டை நிலைபாட்டை எடுப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அத்வானி, ஜோஷி, சுமித்திராவுக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மரபுப்படி ஒரு நபர்...
ரெடிமேட் ஆடை தொழிலில் இந்திய அளவில் முக்கிய இடம் பிடித்த தூத்துக்குடி புதியம்புத்தூரில் செயற்கை இழை தொழில்நுட்ப ஜவுளி தொழிற்பூங்கா
தமிழகத்தின் மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக தூத்துக்குடி மாறி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்பிக், கனநீர் ஆலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஜவுளி மற்றும் ரெடிமேட் துறையிலும் பிரதான இடம் பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் ரெடிமேட்...