மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னை 20% அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனாவால் மூச்சுக் குழாய் தொடர்பான பிரச்னை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து கடந்த 2019ல் கொரோனா பரவ தொடங்கியது அங்கு அதிகமான மக்களுக்கு தொற்று ஏற்பட்டு அதிக உயிர்ப்பலி நிகழ்ந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவியது. இதனால் இந்தியாவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது....
பொது நூலகங்களுக்கு நேர்மையான முறையில் வெளிப்படையாக ரூ.40 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல்: நூலகர்கள் பாராட்டு
* சிறப்பு செய்தி வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை மூலம், சுமார் 40 கோடி ரூபாய்க்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இடைத்தரகர்கள் மூலம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் திமுக அரசு பதவி ஏற்ற...
ஏஐ மாணவர்களுக்கு சவால்கள் காத்திருக்கின்றன மீண்டும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மோகம்
* சிறப்பு செய்தி சில ஆண்டுகளுக்கு முன்புவரை பிளஸ் 2க்கு பிறகு மேற்படிப்புகளுக்கு மாணவர்களின் முதன்மைத் தேர்வாக பொறியியலும், மருத்துவமும் இருந்தன. 2000-க்குப் பிறகான காலகட்டத்தில் இந்தியாவில் உற்பத்தித் துறையும், தகவல் தொழில்நுட்பத்துறையும் (ஐ.டி) வளர்ச்சியடையத் தொடங்கியிருந்த நிலையில் பொறியியல், கணினி அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். காலப்போக்கில் இந்த நிலை...
பெரியவர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால்; காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. மேலும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகிறது. மேலும் வரும்...
தாய்மொழியைக்காக்க வடமாநிலங்களிலும் போராட்டம் இந்தி தெரியாது போடா... நாடு முழுவதும் பரவியது தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு தீ
மொழி ஓர் இனத்தின் அடையாளம்; கலாசாரம். மொழி அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும். இந்தியாவில் பன்முகத்தன்மை என்பது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் அடையாளம். அதை சிதைக்க நடந்த எந்த முயற்சியும் வெற்றி பெற்றதே இல்லை என்பதை கடந்த கால வரலாறு மெய்ப்பிக்கிறது. இருப்பினும், மொழி,...
எலக்ட்ரோலைஸ் பரிசோதனை அவசியம்; கோடையில் முதியோரை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை அதிகம்: சொல்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்
கோடை காலத்தில் நாம் நமது உடல் நலத்தில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டியது முக்கியமோ, அதை விட முக்கியம் வீட்டில் உள்ள முதியவர்களின் நலனின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது. வயதானவர்கள் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளால் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சில...
உடல் நலத்தை மைனஸ் ஆக்கும் மயோனைஸ்: உணவு பிரியர்களுக்கு உயிர் பயத்தை காட்டும் சால்மோனெல்லா பாக்டீரியா; மாற்று வழி உள்ளதாக மருத்துவர்கள் கருத்து
* சிறப்பு செய்தி உலகின் பரிணாம வளர்ச்சியில் நவநாகரிகத்தை நோக்கி நகர்ந்து செல்லும் மனிதர்கள் பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை மறந்து புதிது புதிதாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பண்டங்களுக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்கின்றனர். உணவே மருந்து என முன்னோர்கள் அரிசி, கீரை, பருப்பு வகைகள், தானியங்கள், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை...
ஜாதிய வீடியோக்கள் ரவுடிகளின் ரீல்ஸ் மோகம் ஆபாச படங்கள், அரிவாளை தூக்கும் புத்தக கைகள்
* தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் மாணவர்கள் மோதல் சிறார் குற்றவாளிகள் * நஞ்சை விதைக்கும் செல்போன், கவனிக்க தவறும் பெற்றோர் செல்போன்களின் மூலம் பரவும் விபரீத விஷம் இன்றைய இளைய தலைமுறையினரின் மனதில் பகீர் எண்ணங்களை விதைக்கிறது. யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், முகநூல் என பெருகிவிட்ட சமூகவலைதளங்களில் சிலர் தங்களது ஜாதிய பெருமைகளையும், வீர தீர...
வெளிநாடுகளுக்கு சென்று ‘பைலட்’ பயிற்சி பெறுவதை தவிர்க்க கோவில்பட்டியில் சர்வதேச தரத்தில் விமான பயிற்சி மையம்: ஜூனுக்குள் செயல்படுத்த நடவடிக்கை
* பணிகளை துரிதப்படுத்தியது ‘டிட்கோ’ ஒன்றிய அரசு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில், புதிய விமான நிலையங்களை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் இரண்டாவது விமான நிலையமும், விரைவில் ஓசூர் மற்றும் இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்கள் பலவற்றிலும் விமான நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை...