அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் கிறிஸ்துமஸ் ஆர்டர்களுக்காக தயாரித்தவை திருப்பூரில் முடங்கிய ரூ.500 கோடி பின்னலாடைகள்: தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்; ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில், சுமார் 35%, ரூ.18,000 கோடி ஏற்றுமதி அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவிற்கு விலை குறைவான ஆடைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது....
அமெரிக்க வரிவிதிப்பால்... ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை தோல் தொழில் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஆர்டர்கள் இழப்பு: 25,000 தொழிலாளர்கள் தவிப்பு
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து அதிக அளவில் தோல் தயாரிப்பு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ரூ.18 ஆயிரம் கோடி அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசிற்கு இதுகுறித்து முடிவெடுக்க அமெரிக்கா நிபந்தனை விதித்து கெடு வழங்கியது. அந்த கெடு முடிந்த நிலையில் நேற்று...
வடமாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை, நிலச்சரிவுகள்: தமிழ்நாட்டுக்கும் மேகவெடிப்பு அபாயமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு, அந்த மாநிலங்களை புரட்டிப் போட்டு விட்டது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கடந்த 5ம் தேதி மேக வெடிப்பால் பெருமழை கொட்டியது. ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கடேராவின் நீர் மட்டம் திடீரென உயர்ந்து, அங்குள்ள தாராலி கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு...
50 சதவீத வரி: டிரம்ப் துவங்கிய வர்த்தக போர்; ஜவுளி, கடல் உணவு, தோல் தொழிலுக்கு மரண அடி
* 66% இந்திய ஏற்றுமதிக்கு பாதிப்பு * லட்சக்கணக்கானோர் வேலைக்கு ஆபத்து * என்ன செய்யப் போகிறது மோடி அரசு கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றதில் இருந்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளையும், சலசலப்புகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க மக்களை தனது அதிரடி முடிவுகளால் திணறடித்த...
இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 வரதட்சணை மரணங்கள்: தேசிய குற்ற ஆவணப் பணியகம் தகவல்
சென்னை: இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 வரதட்சணை மரணங்கள் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவணப் பணியகம் தெரிவித்துள்ளது. ‘வரதட்சணை என்பது பெண்களை அடிமைப்படுத்துவதற்கும், பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாக்குவதற்கும் ஒரு கருவியாக இருக்கிறது. இது பெண்களின் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது’ என்று இந்திய அரசியலமைப்பின் தந்தையும் சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கடுமையாக விமர்சித்தார். வரதட்சணை...
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் முதல் சாலை மேம்பாலம்
* உலகிலேயே முதன்முறையாக சென்னையில் அமைகிறது, பாலத்தின் அழுத்தம் சுரங்கத்தை பாதிக்காமல் வடிவமைப்பு, 3டி வடிவிலான படத்தை வெளியிட்டது நெடுஞ்சாலைத்துறை தே னாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கிலோ மீட்டர் தூரத்திற்கு உலக அளவில் மெட்ரோ சுரங்கப்பாதையின் மேல் எழுப்பப்படும் முதல் சாலை மேம்பாலத்தின் 3டி வடிவிலான படத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சென்னை அண்ணா...
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்க-விற்க பசுமை எரிசக்தி கழகத்திற்கு வர்த்தக உரிமம்: அதிகாரிகள் தகவல்
* மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் n உற்பத்தியாளர்கள்-நுகர்வோரிடையே இணைப்பு உருவாகும் தமிழ்நாடு சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பிற புதுப்பிக்க தக்க எரிசக்தி ஆதாரங்களை குறிப்பிடத்தக்க அளவில் கொண்டுள்ளது. தற்போது புதுப்பிக்க எரிசக்தி திறனில் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.மின்சார வாகனங்கள், மின்சார மின்னூட்ட உட்கட்டமைப்பு, மின்கல ஆற்றல் சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன்,...
ரயில்வே துறை மொத்தமும் மந்தம்: ரயிலில் கழிவறை, கைகழுவும் இடங்களில் தண்ணீர் இல்லை; 1 லட்சம் புகார் அளித்தும் பலனில்லை
* சிறப்பு செய்தி கடந்த 2022-23 நிதியாண்டில் ரயில் பெட்டிகளின் கழிவறைகள் மற்றும் கைகழுவும் இடங்களில் தண்ணீர் இல்லாதது தொடர்பாக 1 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. இந்தியாவின் பெருமைமிக்க ரயில்வே அமைப்பு, உலகின் மிகப்பெரிய போக்குவரத்து வலையமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. அதன் அடிப்படை வசதிகளில் உள்ள பயங்கரமான குறைபாடுகளை இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் கணக்கு...
அதிகரித்து வரும் வெறிநாய்க்கடி: ரேபிஸ்சை தடுக்க ஒரே வழி தடுப்பூசி; 4 முறை செலுத்த வேண்டும்; பூஸ்டர் தடுப்பூசி நல்லது; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
* சிறப்பு செய்தி வெறிநாய்க்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்படும் ரேபிஸ் நோய் உலகளவில் பொது சுகாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. ரேபிஸ், ஒரு கொடிய வைரஸ் நோயாகும். இது மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் மூளை, நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி, 99 சதவீத ரேபிஸ் பாதிப்பு...