கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 2403 ஹெக்டேர் புதிய அலையாத்தி காடுகள்: அலையாத்தி காடுகளின் மறுமலர்ச்சி
தமிழ்நாடு, 1,076 கிலோமீட்டர் நீளமான தனது அழகிய கடற்கரையால் இயற்கையின் செழிப்பையும் வளத்தையும் பறைசாற்றுகிறது. இந்தக் கடற்கரையோரப் பகுதிகளில், பல்லுயிர் பெருக்கத்திற்கும், இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்கு வகிப்பவை அலையாத்தி காடுகள். இவை, பூமியின் நுரையீரல்கள் என்று அழைக்கப்படும் காடுகளின் ஒரு தனித்துவமான வகையாக, கடல் மற்றும் நிலத்தின் இணைப்புப் பகுதியில் உயிர்ப்புடன்...
ராணிப்பேட்டையிலேயே இனி லேண்ட் ரோவர், ஜாகுவார் தயாரிப்பு ரூ.9,000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை கட்டுமான பணி தீவிரம்: வரும் ஜனவரியில் திறக்க திட்டம்; 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு
வடஆற்காடு மாவட்ட மக்கள் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். காரணம், வட ஆற்காடு மாவட்டமாக இருந்த வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் வேலை தேடி சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தோல் தொழிற்சாலைகள், ஷூ...
மின் இணைப்பு பெட்டிகளால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க 3,362 இடங்களில் பாதுகாப்பு வலை: துணை முதல்வர் உத்தரவால் ரூ.113.51 கோடியில் நடவடிக்கை
தமிழகத்தில் விரைவில் மழை காலம் தொடங்க உள்ளது. தற்போது மாநிலத்தில் பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னையில் கடந்த வாரம் கூட மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்ததால் தூய்மைப்பணியாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மழை காலங்களில் மின்சார பாதிப்பினால் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை...
18-35வயதுடையவர்கள் பாதிப்பு; மூளையை பாதிக்கும் தூக்கமின்மை: மருத்துவர்கள் அறிவுறுத்தல்
* மொபைல், லேப்டாப் பயன்பாட்டை குறைக்க வேண்டும் * தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வது நல்லதல்ல சென்னை: இன்றைய வேகமான உலகில், தூக்கம் என்பது பலருக்கு ஒரு ஆடம்பரமாகவே மாறிவருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, மன அழுத்தம், மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை இரவு நேரத்தில் தூங்குவதை பாதிக்கின்றன. தமிழ்நாட்டில், குறிப்பாக நகர்ப்புறங்களில், முறையாக தூங்காமையும், தாமதமாக...
பகலில் வெயில், இரவில் மழை; காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு 20% அதிகரிப்பு: காய்ச்சல், சளி, தொண்டை வலியால் மக்கள் அவதி
சென்னை: வெயில் காலத்தில் இருந்து மழைக்காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில், காலநிலை மாற்றங்கள் மனித உடல்நலத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, காய்ச்சல், சளி மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் பரவலாக அதிகரித்து வருகின்றன. வெயில் காலத்தில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் உலர்ந்த காற்று, மழைக்காலத்தில் திடீரென ஈரப்பதம் மற்றும்...
தேசிய நீரோட்டத்தில் இணைந்தது தென்கிழக்கு: மிசோரமின் தரைவழி போக்குவரத்து நனவானது
இந்தியாவின் வடகிழக்கு மூலையில், மேகங்கள் தவழ்ந்து விளையாடும் பசுமையான மலைகளின் மடியில், ஒரு மரகதக் கல்லைப் போலப் பதிந்திருக்கிறது மிசோரம். ‘‘மலைவாழ் மக்களின் தேசம்’’ என அழைக்கப்படும் இந்த மாநிலம், தனது செழுமையான பண்பாடு, அடர்ந்த காடுகள், பல்லுயிர் வளம் மற்றும் மக்களின் அன்பான உபசரிப்பால் தனித்து விளங்குகிறது. அதன் தலைநகரான ஆய்ஸ்வால், செங்குத்தான மலைகளின்...
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தூத்துக்குடியில் ரூ.5,000 கோடி கடல் மீன்கள் ஏற்றுமதி பாதிப்பு
இந்தியா கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த 2023-24ல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடல் உணவு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பதப்படுத்தப்பட்ட இறால், மீன், சிங்கி இறால், கணவா, நண்டு, உள்ளிட்ட மீன் இனங்கள் உணவுகளாக...
அரிதான பாதிப்பு: மூளையை உண்ணும் அமீபா 100 பேரில் 98 பேர் உயிரிழப்பு; குட்டை, குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்; விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
* சிறப்பு செய்தி மூளையை உண்ணும் அமீபா, அறிவியல் ரீதியாக ‘Naegleria fowleri’ என அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் 1960களில் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டது. இது ஒற்றை செல் உயிரினம் ஆகும். சூடான நன்னீர் நிலைகளில், குறிப்பாக ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் மோசமாகப் பராமரிக்கப்படும் நீச்சல் குளங்களில் வாழ்கிறது. மூளையை உண்ணும் அமீபாவின் முதன்மை அமீபிக்...
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை குப்பையை போல் அள்ளி போடும் மருந்தாளுனர்கள்: எதை எப்போது சாப்பிடுவது என தெரியாமல் விழி பிதுங்கும் நோயாளிகள்
மேல்மருவத்தூர்: செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கண் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, முதியோர் நலன், குழந்தைகள் நலன், பல் மருத்துவம், தோல் நோய்கள் பிரிவு, இருதய பிரிவு மற்றும் அவரச சிகிச்சை பிரிவு, பொதுமருத்துவம் என பல்வேறு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த...