உயிரிழந்த மக்களின் ஆன்மா நடிகரை மன்னிக்கவே மன்னிக்காது என்று மக்கள் கூறுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கரூர் கதறல் ஓலம் கேட்ட புல்லட்சாமி விஜயமானவரின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்காம கைகழுவி விட்டதால் யூனியன் பிரதேச நிர்வாகிகள் ரொம்பவே சோகத்தில் இருக்காங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுக் கட்சியை தொடங்கிய விஜயமான நடிகர் தமிழகம் முழுக்க பிரசார திட்டம் வகுத்தாராம்.. கரூர் கதறல் ஓலத்தில் முடிய தலைநகருக்கு ஓட்டம் பிடித்து பதுங்கி...

கரூரே கண்ணீரில் மிதக்கும்போது கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலை நடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
29 Sep 2025

‘‘இனி நான்தான் இலைக்கட்சிக்கு அடையாளம் எனக்கூறி கோட்டையானவரின் ஆதரவாளர்களுக்கு வலை வீசுகிறாராமே மாஜி அமைச்சர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சோப்பு நுரை புகழ் மாஜி அமைச்சர் சமீபகாலமாக உற்சாகத்தில் மிதந்து கொண்டு இருக்கிறாராம்.. மஞ்சள் மாவட்டத்துல இலைக்கட்சி அடையாளமா இருந்த கோட்டையானவர் கட்சிக்கு எதிரா போர்க்கொடி தூக்கியதால கட்சி தலைமை கோட்டையானவரின் பதவிகள் எல்லாத்தையும்...

தேர்தலுக்காக வேலையிலிருந்து விலகுபவர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Ranjith
28 Sep 2025

‘‘தேர்தலுக்காக பணியை துறக்கிறார்களாமே அதிகார வர்க்க ஆட்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரி யூனியனில் புதுப்புது அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வருகிறதாம். லாட்டரி அதிபரின் வருகையால் கடந்த தேர்தலைபோல் இல்லாமல் 2026 பல அணிகளாக உடைந்து களம் காணும் நிலை உருவாக உள்ளதாம். இதனால் மாஜிக்கள் ரகசிய சந்திப்புகளை நடத்தி திரைமறைவு...

இலை கட்சி மாஜி மந்திரிக்கு வரும் மிரட்டல் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
27 Sep 2025

‘‘எம்பி போர்வையில் இனியும் டெல்லி சந்திப்பை தொடர முடியாதுன்னு இலைக் கட்சி மாஜி அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்காமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் மலராத கட்சி முழுமையாக ஈடுபட்டிருக்காம்.. சேலத்துக்காரரின் தனிப்பட்ட பிரசாரம் மக்களிடையே எடுபடாததால் கோட்டையான மூத்த நிர்வாகி மூலம் பிரிந்து சென்றவர்களை ஒன்று...

பாலியல் டார்ச்சர் செய்த பேராசிரியரிடம் மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
26 Sep 2025

‘‘மாணவி அழ காரணமான பல்கலையின் பேராசிரியரிடம் மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியிக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் காரை என்றொரு பிராந்தியம் இருக்கு.. புதுமை பல்கலை.யின் காரை கிளையில் உயர்கல்வி பயிலும் மாணவி அழுதபடி பேசும் ஒரு ஆடியோ வலைதளத்தில் வைரலாகிறதாம்.. துறை சார்ந்த பேராசிரியரின் ஆபாச இசைவுக்கு செவி...

டெல்லியின் எச்சரிக்கையால் கடல்தாண்டி பயணமான மலையானவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Ranjith
25 Sep 2025

‘‘எப்படியாவது கூட்டத்தை கூட்டி சுற்றுப்பயணத்திற்கு வரும் சேலத்துக்காரர் மனசை குளிர்த்துவிட வேண்டும் என்பதில் நிர்வாகிகள் தீவிரமாக இறங்கி இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தில் சேலத்துக்காரர் ரெண்டு நாள் சுற்றுப்பயணம் செய்ய போறாராம்... அவரது வருகையை முன்னிட்டு, அந்த ரெண்டு நாட்களும் அதிகளவு கூட்டத்தை காண்பிக்க வேண்டும்னு நிர்வாகிகள் முடிவு செய்திருக்காங்களாம்.. இதற்காக...

குக்கர், பலாப்பழ ஆதரவாளர்களை தூக்க தூண்டில் போடும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
24 Sep 2025

‘‘சேலத்துக்காரர் ஊரில் எந்த நிகழ்ச்சினாலும் ஓடி வரும் ரத்தத்தின் ரத்தங்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவிட வேண்டும் என்பதில் இலைக்கட்சி தலைவர் ரொம்பவே உறுதியாக இருக்காராம்.. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல பொறுப்பாளர்களை நியமித்து வேலை படுவேகமாக போய்கிட்டிருக்காம்.. ஒரு பக்கம் பிரசாரத்தையும் நடத்திக்கிட்டிருக்காராம்.. இதற்காக...

சேலத்துக்காரருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கோபிக்காரரை சந்திக்க ரெடியாகும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

By Arun Kumar
23 Sep 2025

  ‘‘கடந்த எம்பி தேர்தலில் தூங்கா நகரில் இலைக்கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் மலராத கட்சியினுடனான கூட்டணி தாமரை இலை தண்ணீர் போலத்தான் இன்னும் தொடருதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர்ல இலைக்கட்சியும், மலராத கட்சியும் இன்னும் மனசளவில கூட்டணியா செட்டாக வில்லையாம்.. இலைக்கட்சியும், மலராத கட்சியும் கூட்டணியா இல்லாத நேரத்தில் கூட தூங்கா...

மம்மிக்கு துரோகம் செய்தவர்களிடம் நெருக்கம் காட்டும் இலை தலைவர் மீது நிர்வாகிகள் கொந்தளிப்பில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
22 Sep 2025

‘‘பல்பு டீலிங்ல பர்சன்டேஜ் பெரிய தொகை கைமாறியிருக்குறதா பேசிக்கிறாங்களே தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி ஒன்றியத்துல, ஊராட்சிகள்ல வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள்னு அடுக்கடுக்காக வளர்ச்சி திட்டப் பணிகள்ல பிரச்னைகள் வர ஆரம்பிச்சுட்டதாம்.. இதுக்கு காரணம், கடந்த சில மாசத்துக்கு முன்னாடி ஒரு அதிகாரி, பணியில சேர்ந்தாராம்.. இவரு...

தொகுதியில் வீட்டை காலி செய்து ஏமாற்றத்துடன் திரும்பிய மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Arun Kumar
21 Sep 2025

  ‘‘ஏறுகிற நண்டின் காலைப் பிடித்து இறக்குகிற நண்டின் கதை மலராத கட்சியில் தொடர்ந்து நடந்துட்டு இருக்காமே..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. மலராத கட்சியில் யாருக்காவது ஒரு பொறுப்பு கொடுத்ததுமே, அந்த பதவிக்கு எதிர்பார்த்திருந்துக் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்தால், பொறுப்பு அறிவிக்கப்பட்டவரின் கடந்த காலத்து வழக்குகளை தேடிப்பிடித்து தலைமைக்கு அனுப்பி, தலைசுற்ற வைப்பதில்...