அடுத்த வாய்ப்பு யாருக்கு?

இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67, இந்திய துணை ஜனாதிபதி 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்று கூறுகிறது. இந்த தேர்தலில், ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்று, 2022 ஆகஸ்ட் 11 அன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். இவர், தனக்கு எதிராக...

வாக்குரிமை திருட்டு

By Karthik Yash
07 Aug 2025

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது. தேர்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட...

தொடரும் விதிமீறல்

By Karthik Yash
06 Aug 2025

ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு குடைச்சல் தருவதை ஒன்றிய பாஜ அரசு தொடர் வழக்கமாக கொண்டுள்ளது. பேரவை விதிகளின்படி, மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூடி, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்பதே மரபு. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் அதிகார வரம்பை...

மீண்டும் மகுடம்

By Karthik Yash
05 Aug 2025

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவதை வைத்துத்தான் ஒரு வீரரின் திறமை மதிக்கப்படும். ஆனால், கால மாற்றங்களில் ஒரு நாள் கிரிக்கெட் வந்தது. இதையடுத்து, அரங்கில், டி20 போட்டிகள் அறிமுகமாகின. 20 ஓவர்களில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தும் போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்தனர். டி20க்கான வரவேற்பில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மவுசு குறையுமோ என எதிர்பார்க்கப்பட்டது....

உரிமைக்கு குரல்

By MuthuKumar
03 Aug 2025

‘வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை’ என்றார் கலைஞர். கடந்த 4 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒன்றிய அரசுக்கு எதிராக திமுகவின் ஒவ்வொரு போராட்டங்களும் அந்த வகையில் வீரனுக்குரிய வீரியத்தை வெளிப்படுத்துகின்றன. தமிழை காக்கவும், தமிழ்நாட்டை காக்கவும், மாநில உரிமைகளை காக்கவும் இன்று இந்தியாவிலே ஒன்றிய அரசிடம் முட்டி மோதுகிற முன்னணி மாநிலமாக...

பகடைக்காய்

By Arun Kumar
02 Aug 2025

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஜூலை 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்....

அடுத்த மணிமகுடம்

By Karthik Yash
01 Aug 2025

ஒரு நாட்டின் மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரம் இரண்டுமே மிக முக்கியமானவை. கல்வி அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. சுகாதாரம், உடல் மற்றும் மனநலத்தை பேணுவதற்கு இன்றியமையாதது. இவை இரண்டும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான இரட்டைக் கூறுகளாக இருந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் சுகாதாரம்...

இரு ஹீரோக்கள்

By Ranjith
31 Jul 2025

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதல்வராக இருந்து வருகிறார். இருவருக்குள்ளும் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதல்வர் பதவிப்போட்டி நடந்து வருகிறது. இருவரது ஆதரவாளர்களும் அடிக்கடி மோதிக்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இவ்விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் நவம்பர்...

மாற்றம்... ஏமாற்றம்

By Karthik Yash
30 Jul 2025

பிரதமர் கடந்த 26, 27ம் தேதி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க திறப்பு விழா, கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். 2 விழாக்களிலும் வேட்டி, துண்டு அணிந்து தன்னை தமிழ் உணர்வாளராகவே காட்டிக் கொண்டார். இது மகிழ்ச்சியான செய்தி தான். அதேநேரம் அந்த உணர்வானது தமிழ் மொழியின் பெருமை, பாரம்பரியத்தை...

பதில் இல்லை

By Ranjith
29 Jul 2025

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்; தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து இருக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள் என இருதரப்பும் காரசாரமாக கேள்வி எழுப்பி, பதில் அளித்து இருக்கிறார்கள். ஆனால் பஹல்காம் தாக்குதல் ஏன், எப்படி நடந்தது? இது யாருடைய தோல்வி என்ற கேள்விக்கு மட்டும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. காஷ்மீர் மாநிலம்...