தீர்வு கிடைக்குமா?
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தமிழகத்திற்கு நாங்கள் நிதியை அள்ளி அள்ளி தருகிறோம் என்கிற கோணத்தில் பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். வெள்ள நிவாரண நிதி தொடங்கி கல்வி நிதி வரை பலமுறை கேட்டு கேட்டு தமிழகம் சலிப்படைய தொடங்கிவிட்டது என்பதே...
பெற்று தந்த பெருமை
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாத மாநிலங்களில் கவர்னர்களை கைப்பாவையாக வைத்து அத்துமீறலில் ஈடுபடுவது ஒன்றிய பாஜ அரசின் சர்ச்சைக்குரிய வாடிக்கைகளில் மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் மற்றும் மேலும் சில மாநிலங்களிலும் இந்த அடாவடி தொடர்கிறது. சமூக மேம்பாட்டின் மீது பெரும் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கவர்னர்களின்...
கேலிக்கூத்து
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கு ‘தீவிர சிறப்பு திருத்தம்’ என பெயரிட்டுள்ளது. தற்போது பீகாரை மையம் கொண்டிருக்கும் இந்த பணி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திருத்த பணிக்கான தொடக்க புள்ளியாக 2003ம்...
யுபிஐயால் பாதிப்பு
பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் மயமாக்கிய ஒன்றிய அரசு பெரிய சாதனை படைத்துவிட்டதாக மார்த்தட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் யுபிஐ பணப்பரிமாற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர, சிறிய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எளியவர்களை தான் சட்டம் வலைவீசி பிடிக்கும் என்ற பழமொழிக்கேற்ப காய்கறி வியாபாரம் செய்து அன்றாடம் சொற்ப லாபம் பார்க்கும் சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த சொல்லி வணிகவரித்துறை நோட்டீஸ்...
வெற்றிநடை
தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டில் தனிநபர், தனது வேலைவாய்ப்பு, சுயதொழில் மூலம் பெறும் வருமானம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு கூறப்படுவதாகும். சில சமயங்களில் தனிநபர் சார்ந்த கூட்டுத்தொழில் மூலமும், குடும்ப உறவுகள் மூலம் பெறப்படும் வருமானமும் கணக்கிடப்படும். அந்த வகையில் இந்தியாவின் தனிநபர் வருமானம், கடந்த 2024-25ம் ஆண்டில் ரூ.1,14,710 ஆக உயர்ந்துள்ளது. 2014-2015ம் ஆண்டு...
புரியாத புதிர்
ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்து விட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் அவை நடவடிக்கைகளை இறுதி வரை இருந்து வழிநடத்திய தன்கர், இரவில் பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டது டெல்லி அரசியலில் புயலை கிளப்பி...
மறுபடியும் வெளுக்கட்டும்
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. கடந்த கூட்ட தொடர்களில் மோடி ஆட்சியில் 12.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள், ஒன்றிய அரசின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்வு உள்ளிட்ட பல புனைவு கதைகளுக்கு எதிர்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பரபரப்பான சூழலில் இவ்வாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்குகிறது....
75 வயது சர்ச்சை
ஆர்எஸ்எஸ் என்னும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் இருந்து உருவான ஜன சங்கம் என்னும் அமைப்பு, பிறகு 1980ல் பாரதிய ஜனதா கட்சியாக உருபெற்றது. நாட்டை ஆளும் பாரதிய ஜனதா கட்சியில், இன்றைக்கு பெரும் தலைவராக, அனைத்தையும் இயக்கும் நபராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். ஆனால், பாஜவில் ஒரு எழுதப்படாத விதியாக 75 வயது பூர்த்தியானவர்கள்,...
அனல் பறக்கும்
பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி துவங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில், தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா உள்பட 8 மசோதாக்கள்...