உயிரின் போராட்டம்
நிமிஷா பிரியா... உலக அளவில் விவாதிக்கப்படும் பெயர். அவரது உயிர் தப்புமா, தப்பாதா? இன்றைய நிலவரப்படி இன்று நடைபெற இருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. அதை அப்படியே தடுத்து நிறுத்த வேண்டும். மோடி அரசால் முடியவில்லை என்று உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது. இனி தனி மனித முயற்சி தான். ஒன்றிய அரசும்...
மக்களுடன் முதல்வர்
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் வேகங்களுக்கு தடை போடும் விதமாக தமிழ்நாட்டுக்கான நிதியை தராமல் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் எதற்கும் அசராமல் புதிய புதிய திட்டங்கள் மூலம் சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின்நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு துறைகளின் முக்கிய தகவல்கள்,...
மக்களுக்கே பாதிப்பு
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. டிரம்பின் ஆசியோடு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிண்ட்சேகிரகாம், ரிச்சர்ட் புளூமெந்தால் ஆகியோரால் ‘ரஷ்யாவிற்கு எதிரான தடைச்சட்டம் 2025’ என்ற மசோதா புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. ‘`ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்காவில்...
இனி எல்லாம் வேகம்...!
இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் புறப்பாடு மற்றும் வருகையின்போது பயணிகள் எளிதாக செல்லும் வகையில் புதிய பாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம், தற்போது, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், கொச்சி், அகமதாபாத் ஆகிய...
விழிக்குமா பாஜ அரசு
விழுப்புரத்தில் இருந்து நேற்று முன்தினம் மயிலாடுதுறை நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில், கடலூர் முதுநகர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நொறுங்கி 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாயினர். சிலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். பொதுவாக, ரயில்வே கேட் பகுதி அருகே...
சென்னை நம்பர் 1
2021 ஆம் ஆண்டுக்கு முன்பு 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல்துறைகளில் தமிழ்நாடு பின்தங்கியிருந்தது. இன்று எங்கும், எதிலும் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறது. கல்வி, தொழில்துறை, உயர் கல்வி உள்ளிட்ட அத்தனை துறைகளிலும் நம்பர் 1 இன்று தமிழ்நாடு தான். இந்திய அளவில் அத்தனை துறைகளிலும் நம்பர் 1...
கடைக்கோடிக்கும் சேவை
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை கடந்தும் மேலும் பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறார். அந்த திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் கண்காணித்து வருவதால் மக்களுக்கான ஆட்சியாகவே நடத்தி வருகிறார். ஒவ்வொரு குடும்பத்திலும் விடியலை ஏற்படுத்த வேண்டும் என்பதை தான் முதல்வர் தாரக மந்திரமாக செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்...
பாஜவிற்கு பாடம்
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதற்கான மூல விதை சென்னை மாகாணத்தில் 1930களில் போடப்பட்டது. இப்போது இந்தி பேசும் மக்கள் பரவலாக வாழும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பது...
தனித்துவம்
காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த மே மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மக்கள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானின் எல்லைமீறிய ஆணவத்துக்கு...