மக்களாட்சி மலருமா...?
மணிப்பூர் மாநிலத்தில், குக்கி இன மக்கள் தங்களது பகுதிகளை ஒருங்கிணைத்து சுயாட்சி நிர்வாக கவுன்சில் அமைக்கக்கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 2023ம் ஆண்டு மைத்தேயி-குக்கி இனக்குழுக்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில், 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். கலவரத்தின்போது மிசோரம், மேகாலயா, நாகாலாந்து...
மீண்டும் வாக்குச்சீட்டு
நாடு முழுவதும் தேர்லில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்ைட முன்வைத்தார். பெங்களூரு மத்திய தொகுதியிலும் வாக்குத்திருட்டு நடந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து பீகாரில் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் மேற்கொண்டா்ர். பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை...
தங்கம் தரையிறங்குமா?
கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி 25 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. பட்ஜெட் தாக்கலின்போது ஒரு பவுன் ரூ.62 ஆயிரத்துக்கு விற்பனையானது. பட்ஜெட்டில் அறிவித்த மறுநாள் மட்டும் குறைந்த தங்கம் விலை, அதன்பிறகு...
மாணவர் போராட்டம்
முதலில் இலங்கை, அடுத்து வங்கசேதம், இப்போது நேபாளம். அடுத்தடுத்து அண்டை நாடுகளில் நடந்த மாணவர் போராட்டத்தால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கையில் 2022ம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். மிருக பலத்துடன்...
போராட்டம் வெடித்தது
இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் ஆகியோர் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் சந்திக்கும் போது, நான் எழுதிய கடிதங்கள், வாழ்த்து மடல்கள் கிடைத்ததா என கேட்பார்கள். இல்லை என்றால் சோகமாகி விடுவார்கள். ஆனால் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு இது வேடிக்கையாகத் தோன்றும். ‘ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் செஞ்சிருக்கலாமே?’ என சொல்வார்கள். அந்தளவுக்கு...
புதிய உச்சம்
தங்கம் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் ஒரு அங்கமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்திற்கு நிகரான முதலீடுகள் எதுவுமே இல்லை எனலாம். குறிப்பாக தென்னிந்தியாவில் பொதுமக்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். குழந்தை பிறப்பது தொடங்கி, பல்வேறு சுபநிகழ்வுகளில் ‘தங்கம்’ ஒரு தனி மனிதரின் செல்வ செழிப்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகள் என்றால்...
திராவிடத்தின் தனித்துவம்
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை தமிழ் நிலத்திற்கு தந்து ஒட்டு மொத்த தேசத்தின் கவனத்ைதயும் ஈர்த்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதே போல், தொலைநோக்கு பார்வையோடு அயல்நாடுகளுக்கு பயணித்து, தொழில் முதலீடுகளை குவிக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றவேண்டும் என்ற இலக்கோடு,...
முதலீட்டாளர்கள் முகவரி
2030 ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிவேக பாய்ச்சலில் பயணித்து வருகின்றார். உள்நாட்டு தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க செய்யும் அதே வேளையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். தொழில் மயமாக்கலில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக...
முதலீடுகளின் முதல்வர்
வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டுமென இலக்கை நிர்ணயித்து, அதற்கேற்ப பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அரசு சார்பில் கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட 9...