கலைஞர்களுக்கு கவுரவம்
2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெறும் 90 கலைஞர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.இயல், இசை, நாடகம் என்ற அடிப்படையில், நாடகம், திரைப்படம், சின்னத்திரை உட்பட பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கலைமாமணி, இதைத்தவிர இம்மூன்று துறைகளில் சாதனையாளர்களாக திகழ்ந்த மகாகவி பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோரின் பெயரிலும் அகில இந்திய விருதுகள்...
கப்பர்சிங் வரி
இது கப்பர்சிங் வரி என்றார் ராகுல்காந்தி. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது அவரது கருத்து. ஷோலே படத்தின் படுகொடூர வில்லன் கப்பர்சிங். அதைப்போன்ற கொடூர வரி என வர்ணித்து ராகுல் இதை கூறியிருந்தார். எப்போதும் போல் ராகுல்காந்தி கடுமையாக அப்போதும் விமர்சனம் செய்யப்பட்டார். இன்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசு யூடர்ன் அடித்து...
வரிக்குறைப்பு அமல்
இ ந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த நாள் முதலே ஏழை, நடுத்தர மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். பணமதிப்பிழப்பு தொடங்கி, ஆண்டுதோறும் அரசியல் சட்டங்களை திருத்தி அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிய அரசு படாதபாடு படுத்தி வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோஷத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த...
இந்தியாவே குறி
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்பு, அவர் எடுக்கும் அதிரடி முடிவுகளும், திட்டங்களும் இதர நாடுகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில் திறன்வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ‘அமெரிக்க ஹெச்-1பி விசா’ கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, ஹெச்-1பி விசாவிற்கான கட்டணம் 1 லட்சம் அமெரிக்க...
எதிர்பார்ப்பு
நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த 1993ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று உருவாக்கப்பட்ட திட்டம், ‘‘நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்’’ (MPLADS). நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், படிப்படியாக இந்த நிதி அதிகரிக்கப்பட்டு, 2011-12ம்...
கடிவாளம் அவசியம்
உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. எந்த மூலை, முடுக்கில் எது நடந்தாலும் உடனே ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆக்கப்பூர்வமான செய்தியாக இருந்தால் வரவேற்கலாம். ஆனால் ஒரு விஷயம் குறித்தோ, அந்த சம்பவம் குறித்த தெளிவான தகவல்களோ தெரியாமல் சமூக ஊடகங்களில் தான் தோன்றித்தனமாக கருத்துகளை பதிவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மன...
ரசிகனாக இருப்போம்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி முடிந்து 3 நாட்களை கடந்தும் வீரர்கள் கை குலுக்காத சர்ச்சை தீரவில்லை. பொதுவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகள், இருநாடுகளும் எதிரெதிரே ஆடத் துவங்கிய காலத்தில் இருந்தே அனல் பறக்கும். சார்ஜா கோப்பை பைனலில் சேத்தன் சர்மா வீசிய...
அதிரும் களம்
பீகார் சட்டப்பேரவைக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் களம் அதிர்ந்து போய் இருக்கிறது. அக்டோபரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நவம்பர், டிசம்பரில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் பீகார் வாக்காளர் பட்டியலில் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கு...
இசை ராஜாங்கம்
கடந்த அரை நூற்றாண்டில் திரையிசை உலகில் இளையராஜா தொட்டுள்ள உச்சங்களை, இந்தியாவில் வேறு எந்த இசைக்கலைஞரும் தொட்டதில்லை. 1970களில் தமிழ் சினிமாவுலகில் இந்தி திரைப்பட பாடல்களின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காலக்கட்டத்தில், ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ என்ற ஒரே பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் இளையராஜா. தமிழ் சினிமாவுலகில் கதை, திரைக்கதை,...