ஆர்எஸ்எஸ் முகாமில் 4 வயது முதல் பாலியல் கொடுமை: இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு முன்னாள் தொண்டர் தற்கொலை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பொன்குன்னம் பகுதியை சேர்ந்தவர் அஜி. இவரது மகன் அனந்து அஜி (24). ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வந்த இவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தார். அனந்து அஜி பொன்குன்னத்தில் தன்னுடைய தாய் மற்றும் தங்கையுடன்...
மாநகராட்சி பள்ளியில் திருடிய 2 பேர் கைது
சென்னை: ராயப்பேட்டை பேகம் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹ்பூர் ரஹ்மானி (57), கடந்த 6ம் தேதி ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த 6ம் தேதி காலை பள்ளியை திறந்த போது, சமையல் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில்...
சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு வீட்டை திறந்து நகை திருட்டு
அண்ணாநகர்: அரும்பாக்கம் வள்ளுவர் சாலை, ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் விமலா. இவர், தனது வீட்டு சாவியை ஜன்னல் ஓரமாக உள்ள ஆணியில் மாட்டி வைப்பது வழக்கம். இதை நோட்டமிட்ட மர்ம நபர், நேற்று முன்தினம் இரவு, அந்த சாவியை எடுத்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது விமலா மற்றும் குடும்பத்தினர் அயர்ந்து...
பட்டப்பகலில் வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பிரபல பள்ளி காவலாளி கைது
சென்னை: வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி காவலாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இந்து (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி, கல்லூரி ஒன்றில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9ம் தேதி வீட்டின்...
வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ.1.15 லட்சம் திருடிய வாலிபர் சிக்கினார்
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் வள்ளீஸ்வரன் தோட்டம் பி-பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). இவர் பழைய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி ராஜாவின் தாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று, மாலை திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ...
உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது
மதுரை: உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்த போலீசார் மாணிக்கவாசகர் சிலையை கைப்பற்றினர் ...
சென்னை பாரிமுனையில் நரேஷ் என்பவரை வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
சென்னை: சென்னை பாரிமுனையில் நரேஷ் என்பவரை வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கயத்ரி, அன்பரசி, விமல் அபிஷேக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கணினி விற்பனை கடை உரிமையாளர் நரேஷை கடந்த 3-ம் தேதி வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்தனர். ...
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி சந்தனராஜ் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி சந்தனராஜ் கைது செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக பேசியபடி தன்னை பிடிக்க வந்த உதவி ஆய்வாளரை இளைஞர் வெட்ட முயற்சித்துள்ளார். போலீசார் சுற்றி வளைத்து பிடித்து தீவிர விசாரணை...
நண்பருடன் இரவு உணவிற்கு சென்ற போது கொடூரம்; மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி கும்பலால் கூட்டு பலாத்காரம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பஸ்சிம் பர்தாமன் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி தனது நண்பருடன் இரவு...