உங்களை தேடி உங்கள் ஊரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் நேரில் ஆய்வு
பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”சிறப்பு முகாம் நடைபெற்றது. நாயக்கன்பாளையம் ஊராட்சி பாலமலை கிராமத்தில், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீண்டதூர கம்பியில்லா இணைய இணைப்பை கலெக்டர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்து...
ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு
டெல்லி: ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வரி விதிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ...
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
புதுக்கோட்டை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று அளித்த பேட்டி: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பதற்கு எனது ஆட்சி காலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் அரசியல்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது....
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெண் குழந்தைகள் தின விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு: தேசிய பெண் குழந்தைகள் தின விருது பெற தகுதியுடைய பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல்...
பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல நிறைவு; ஆன்மிகப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது
பழநி: பழநியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஆன்மிகப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு 16 பேருக்கு முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்க்கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடான பழநியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்றுமுன்தினம் துவங்கியது. நிறைவு நாள் விழா நேற்று காலை 9...
வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 385 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கோதையாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளபெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க...
ஒன்றிய அரசின் புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்
புதுடெல்லி: ஒன்றிய உள்துறை செயலாளராக இருக்கும் அஜய்குமார் பல்லா பதவிக்காலம் ஆக.22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய உள்துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஒன்றிய காலாச்சாரத்துறை செயலாளராக இருக்கும் அவர் உடனடியாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு அதிகாரியாக இணைய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிந்த் மோகன் ஐஏஎஸ் 1989ம் ஆண்டு...
திருத்தணி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் இணைப்பு துண்டிப்பு
திருத்தணி: சென்னை துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று சரக்கு ரயில் 20 பெட்டிகளுடன் நிலக்கரி நிரப்பிக் கொண்டு அரக்கோணம் மார்க்கத்தில் மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் மாலை 7 மணி அளவில் திருத்தணி ரயில் நிலையம் அருகில் சிக்னலுக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்து கொண்டிருந்தது. இதில், சிக்னல் கிடைத்தவுடன் இன்ஜின் டிரைவர்...