ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.27 லட்சம் வாங்கிய ஆஸ்திரேலிய வாலிபர் உள்பட 3 பேரை கடத்தி தாக்கி சித்ரவதை: சேலத்தில் 9 பேர் கும்பல் கைது
சேலம்: சேலம் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.27 லட்சம் வாங்கிய ஆஸ்திரேலிய வாலிபர் உள்பட 3 பேரை கடத்தி ஓட்டல் அறையில் அடைத்து தாக்கிய 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.சேலம் அழகாபுரம் கான்வென்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (29). ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள இவர், அவரது மாமா அந்தோணிராஜ் வீட்டில்...
துணை ராணுவ டி.எஸ்.பி. மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
சென்னை: துணை ராணுவ டி.எஸ்.பி. மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெரியார் திடலில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கணவரை மிரட்டிய டி.எஸ்.பி. ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.28 லட்சம் கனஅடியாக இருந்து நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும், சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
முதல்வர் குறித்து அவதூறு : வருத்தம் தெரிவித்தார் முன்னாள் டிஜிபி நட்ராஜ்!!
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தான அவதூறு பதிவை பகிர்ந்ததற்கு முன்னாள் டிஜிபி நட்ராஜ் வருத்தம் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி வாட்ஸ்ஆப் குழுவில் அவதூறு பதிவை பகிர்ந்ததற்கு வருத்தம் தெரிவித்தார் முன்னாள் டிஜிபி. முதல்வர் மு .க.ஸ்டாலின் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.மனு விசாரணையின்...
முதல் முறையாக இலங்கை சாம்பியன்: பைனலில் இந்தியா ஏமாற்றம்
தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் பரபரப்பான பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் மோதிய இலங்கை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. ராங்கிரி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்...
சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!
மும்பை: வர்த்தகம் தொடங்கிய உடனேயே பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சமடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 35 புள்ளிகள் குறைந்து 79,441 புள்ளிகளில் முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி...
சிறுகதை-உறவு முத்திரை
நன்றி குங்குமம் தோழி நான் இந்திரன். எம்.எஸ்.ஸி பட்டதாரி. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி, லட்சத்திற்கு அருகில் சம்பளம் வாங்கும் 31 வயது வாலிபன். எந்தவிதமான கெட்டப் பழக்கமும் இல்லாத ஆரோக்கியமான உடல் வாகு அமைந்த கலரான கட்டிளங்காளை. அப்பா, அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் உடுமலைப்பேட்டையில் வேலை பார்த்து...
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,655க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு; கோவிலாறு அணையை தூர்வார வேண்டும்: வத்திராயிருப்பு விவசாயிகள் கோரிக்கை
வத்திராயிருப்பு: கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள கோவிலாறு அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் நீர்த்தேக்கம். இந்த பகுதியில் கடந்த 1971ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் பிளவக்கல் நீர்த்தேக்கம் என அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் ஒரே அணையாக...