அம்பத்தூரில் உள்ள ஆனந்தபவன் சமையலறையில் தீ விபத்து

சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தபவன் ஹோட்டல் உணவகத்தின் சமையலறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஏ2பி உணவகங்களுக்கு அம்பத்தூர் சமையலறையில் இருந்து உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. ஆனந்தபவன் ஹோட்டல் சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறி வருகிறது. 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்....

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு: ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

By MuthuKumar
11 Nov 2024

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவர் அடுத்த ஆண்டு மே 13ம் தேதி வரையிலும் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, 51 வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். அவரது பதவியேற்பு...

அருவங்காடு பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

By MuthuKumar
09 Nov 2024

ஊட்டி, நவ. 10: அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி மற்றும் டெம்ஸ் பள்ளிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சுதா செல்வகுமார் மற்றும் சோபா ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு சிறப்பு அழைப்பாளராக...

காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் மீன்களின் விலை குறைந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

By Ranjith
03 Nov 2024

சென்னை: மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று சென்னை காசிமேடு மீன் சந்தை பரபரப்புடன் காணப்பட்டது. அதே நேரத்தில் மீன் விலை குறைந்திருந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று அதிகளவில் மீன் பிடித்து வருகின்றனர். இதனால், எப்போதும் காசிமேடு துறைமுகம் மக்கள் வெள்ளத்தில்...

நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடி: துணி, பட்டாசு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகம், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

By Ranjith
01 Nov 2024

சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு, துணி, இனிப்பு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீபாவளிக்கு நாடு முழுவதும் சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (வியாழன்)...

தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

By Lavanya
01 Nov 2024

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 34 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல்,திருச்சி, பெரம்பலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை,...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனை..!!

By Lavanya
01 Nov 2024

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து 7,385-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

By Arun Kumar
26 Oct 2024

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு கடந்த அக்.3-ம் தேதி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது....

பாபா சித்திக் படுகொலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

By Arun Kumar
13 Oct 2024

சென்னை: தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச்...

மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

By MuthuKumar
30 Sep 2024

அவனியாபுரம்: மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துகுமார் கூறியதாவது: இன்று முதல் (அக்.1) மதுரை விமான நிலையம் 24 மணிநேரம் இயங்கும். துவக்க நிகழ்ச்சி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்திய விமான ஆணைய தலைவர் சஞ்சீவ் குமார், எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மத்திய தொழில்...