ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் நெற்பயிர் சேதம் கணக்கெடுப்பு..!!
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் ட்ரோன் மூலம் நெற்பயிர் சேதம் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ...
நெய்வேலி நிலக்கரி கழகத்தில் 160 இடங்கள்
பணி: Executive Engineer. மொத்த காலியிடங்கள்- 160. பொறியியல் பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: Mechanical- 89, Electrical- 41, Civil-30. இடஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி...
விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
விழுப்புரம்: 'விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது; புயல் அறிவிப்பு வெளியான உடனேயே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள், 8 மாநில பேரிடர் குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளது' என விழுப்புரத்தில் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு...
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் ரூ.4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, நெம்மேலி பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் மழையால் தடைபட்டநிலையில், தற்போது மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்...
எம்பி, எம்எல்ஏக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவின்படி, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது பற்றி தாமாக முன்வந்து எடுத்த வழக்க்கில் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள...
“முதல்வர் படைப்பகம்” திட்டமானது முதல்வரின் சிந்தனையில் உதித்த திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை கேட்டுக்கொள்கிறோம்: அமைச்சர் சேகர்பாபு
சென்னை: “முதல்வர் படைப்பகம்” திட்டமானது முதல்வரின் சிந்தனையில் உதித்த திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை கேட்டுக்கொள்கிறோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய...
குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ...
தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 4 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல்
சென்னை :தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 4 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழி, கொள்ளிடத்தில் தலா 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ...
அம்பத்தூரில் உள்ள ஆனந்தபவன் சமையலறையில் தீ விபத்து
சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தபவன் ஹோட்டல் உணவகத்தின் சமையலறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஏ2பி உணவகங்களுக்கு அம்பத்தூர் சமையலறையில் இருந்து உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. ஆனந்தபவன் ஹோட்டல் சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறி வருகிறது. 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்....