ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்..!!
இஸ்லாமியர்களின் பெரு விழாவான ரம்ஜான் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், இது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் நோன்பு, பிரார்த்தனை, தியானம் மற்றும் சமூகத்தின் ஒரு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. ...
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகளை இந்த மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்று மொத்தம் மற்றும் சில்லறையாக விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தேவதத்தூர், அம்பிளிக்கை,...
சதுரகிரி மலைப்பாதையில் சிறகடிக்கும் அரிய வகை இலங்கை வண்ணத்துப்பூச்சி
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் வாழைத்தோட்டம் என்னும் மலைப்பகுதி உள்ளது. இப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லலாம். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழியாகச் சென்ற மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் அரியவகை ‘இலங்கை ஐந்து வளையன் என்னும் வண்ணத்துப்பூச்சி’ இருப்பதைப் பார்த்து ஆவணம் செய்துள்ளனர். இது...
மழை இல்லாததால் நீர்வரத்து இல்லை: தேனி மாவட்டத்தில் நீர்மட்டம் குறைந்து வரும் அணைகள்
தேனி: தேனி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து இல்லாமல், நீர்மட்டம் குறைந்து வருகிறது. வைகை, பெரியாறு அணைகளுக்கு மிகக்குறைந்த அளவிலே நீர்வரத்து உள்ளது. தேனி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில், அதிக மழைப் பொழிவு இருந்ததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி...
சாலையில் ராட்சத பள்ளங்கள்: பார்வதிபுரத்தில் விபத்து அபாயம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை உள்ள சாலையின் கட்டுப்பாடு தேசிய நெடுஞ்சாலைதுறை, மாநில நெடுஞ்சாலைத்துறையில் உள்ளது. இதனால் ஒரு துறை சாலையை பராமரிக்கும்போது சில பகுதி குண்டும் குழியுமாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த சாலையை ஒரு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி முதல்...
கும்பப்பூ அறுவடை முடியும் நிலையில் குமரியில் உளுந்து சாகுபடி தீவிரம்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கும்பபூ அறுவடை முடியும் நிலையில் விவசாயிகள் உளுந்து சாகுபடி பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். குமரி மாவட்டத்தில் சுமார் 6,500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. விவசாய பயிர்களுக்கு தழைசத்து, சாம்பல் சத்து, மணிசத்து ஆகிய சத்துக்கள் தேவைப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தழைசத்துக்கு யூரியாவும், சாம்பல் சத்துக்கு பொட்டாசும்,...
வங்கி கணக்கு தொடங்க ஆதார் மையங்களில் குவியும் பள்ளி மாணவர்கள்
திருப்பூர்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்கள் அனைவரும் வங்கிகளில் தங்களது சேமிப்புக் கணக்குகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பல்வேறு உதவித்தொகைகளை மாணவர்கள் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கிலேயே பெற்றுக் கொள்ளும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் வங்கிகளில் தங்களது சேமிப்பு கணக்கு...
கன்னியாகுமரி - காரோடு நான்கு வழி சாலைக்கு தோட்டிக்கோட்டில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி - காரோடு நான்கு வழிச்சாலையில், தோட்டிகோட்டில் பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜூன் மாதத்துக்குள் கான்கிரீட் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. முடங்கி கிடந்த இந்த பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. நாகர்கோவில் -...
திசையன்விளையில் இருந்து குமரிக்கு வரும் முந்திரிபழம்: கிலோ ரூ.100க்கு விற்பனை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்திற்கு சீசனுக்கு ஏற்ற பழங்கள் விற்பனைக்கு பல மாவட்டங்களில் இருந்த வந்துகொண்டு இருக்கிறது. தற்போது தர்பூசணி பழம் சீசன் களைகட்டியுள்ளது. திண்டிவனம், தூத்துக்குடி, ஒசூர் உள்பட பல இடங்களில் இருந்து தர்பூசணி பழம் வந்துகொண்டு இருக்கிறது. சீசன் தொடங்கியபோது கிலோ ரூ.20க்கு தர்பூசணி பழம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.10க்கு...