சாதனைக்கு வயது தடையல்ல!
நன்றி குங்குமம் தோழி முனைவர் ரவி சந்திரிகா! வயது அதிகரித்தாலும் அதைப் பற்றி நினைக்காமல் என்றும் துடிப்புடன் இளமையாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி, லைஃப் ஸ்டைலில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி போல் மற்ெறாரு சிறப்பான பயிற்சிதான் யோகாசனம். இதனை மற்ற வீட்டுப் பணிகள் மற்றும்...
குழந்தைகளின் உணர்வுகளை மதியுங்கள்!
நன்றி குங்குமம் தோழி ‘‘குழந்தைகளுடன் உரையாட வேண்டுமென்றால் அவர்களுடைய உலகத்திற்குள் செல்ல வேண்டும். குழந்தைகளின் மனநிலை எப்போதும் சந்தோஷமாகவும், விளையாட்டுத்தனமாகத்தான் இருக்கும். அந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது அவர்களுக்குள் இருக்கும் குழந்தை தன்மையை கொன்று விடுவதற்கு சமம். ஒவ்வொரு குழந்தையின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும்’’என்று பெற்றோர்களுக்கு...
ஆழ்கடலில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த தென்னக வீராங்கனைகள்!
நன்றி குங்குமம் தோழி கடந்த எட்டு மாதங்களாக, இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் ரூபா அழகிரிசாமி, லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கோனாத் இருவரும் ஆர்ப்பரிக்கும் கடலில் ‘ஐஎன்எஸ்வி தாரிணி’ (INSV TARINI) என்ற சிறிய படகில் இரவு, பகல் பயணம் செய்து வரலாறு படைத்துள்ளனர். லெப்டினன்ட் கமாண்டர் ரூபா புதுச்சேரியைச் சேர்ந்தவர்....
கிச்சன் டிப்ஸ்
* பருப்பு உசிலி செய்ய பருப்பை முதலில் ஊறவைத்து வடிகட்டி, அப்படியே இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து விடவும். ஆறியதும் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் பூப்போல உசிலிக்கு தேவையான பருப்பு ரெடி. * லட்டுக்கு பாகு எடுக்கும் போது கம்பிப் பதத்தில் இருக்க வேண்டும். முத்து முழுவதுமாக...
தடைகள் இல்லை... வானமே எல்லை!
நன்றி குங்குமம் தோழி (5000த்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த ஜெயா ஜெய் கிஷன்) “என்னால காரை ஓட்ட முடியாதுன்னு பயந்து கிட்டே இருந்தேன் மேடம்… சே! இவ்வளவுதானா? இதை எப்பவோ கற்றுக்கொண்டிருக்கலாமே!” அந்த பரிதவிப்பும், பின்னர் ஏற்பட்ட சுதந்திர உணர்வும், அதே முகத்தில் விரிந்த எல்லையற்ற சந்தோஷமும்! அதுதான் ஜெயா ஜெய்...
சினிமா துறையில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி ரிமா தாஸ் 2017ம் ஆண்டில் வெளி யான இவரின் இரண்டாவது திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. சொந்தமாக ஒரு இசைக்குழுவை உருவாக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு, தன் முதல் கிட்டார் கருவியை வாங்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வருகிறார் பத்து வயதான...
சிறுகதை - காணாமல் போன கூஜா!
நன்றி குங்குமம் தோழி எங்குதான் போயிருக்கும் கூஜா? நெற்றிப்பொட்டைத் தேய்த்துக் கொண்டு யோசித்தாள் சுமதி, தெரியவில்லை. வீடு பூராவும் தேடிவிட்டாள். காணாமல் போன கூஜா எங்கு தேடியும் இல்லை. அழகான அழுத்தமான ஆப்பிள் கூஜா. ஏெழட்டு பேருக்கு காபி வாங்கலாம். சுமதி அம்மா கல்யாணத்திற்கு பரிசாய் வந்தது. சின்ன ஸ்பூன் காணவில்லை என்றாலும் பதறும்...
தலைமுடி உதிராமல் இருக்க...
நன்றி குங்குமம் தோழி பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும். படுக்கும் முன் கூந்தலை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். *தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து...
திறமைக்கு வறுமை தடையில்லை!
நன்றி குங்குமம் தோழி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம்தான் தாதன்குளம். அங்கு பிறந்து வளர்ந்தவர் மாலதி. பசுமை நிரம்பிய தன் கிராமத்து மக்களுக்காக குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகவே ஒரு அமைப்பினை துவங்கி அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசி வருகிறார். தமிழகமெங்கும் உள்ள மாற்றுத்திறனாளிகளை விளையாட்டு வீரர்களாக மாற்றி ஒரு அடையாளமாக வாழ்ந்து...