வழக்கில் ஆஜராகாத கோட்டாட்சியருக்கு பிடிவாரண்ட்
விருத்தாசலம், அக். 25: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பழைய விருத்தகிரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(67). இவருக்கும், இவரது சகோதரர் பன்னீர்செல்வம் என்பவருக்கும், விருத்தாசலம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருவருக்கும் பதியப்படாத பாக பத்திரம் மூலம் பாகப்பிரிவினை செய்ததாகவும், இதனால் பன்னீர்செல்வம்...
மதுபாட்டில் விற்றவர் கைது
பண்ருட்டி. அக். 24: பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை மேட்டமேடு பஸ் ஸ்டாப் அருகே புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏபி குப்பம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த அருள் முருகன் (42) என்பவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை...
பரங்கிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்ததில் கோஷ்டி மோதல்: இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு
புவனகிரி, அக். 24: பரங்கிப்பேட்டை அருகே உள்ள தச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் கோயில் அருகே பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன், ஏன் இங்கு பட்டாசு வெடிக்கிறீர்கள் என கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இந்த...
திண்டிவனம் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணப்பெண் மாயம்
திண்டிவனம், அக். 24: திண்டிவனம் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி உமா (53) இவர்களது இளைய மகள் சுகாசினிக்கு (26) திருமண ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 31ம் தேதி திருமணம் நடைபெற இருந்த...
பூனையை துரத்தி சென்றவர் கீழே விழுந்து பலி பண்ருட்டி அருகே சோகம்
பண்ருட்டி, அக். 23: பூனையை துரத்தி சென்ற போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி(62). நேற்று இவரது வீட்டின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை பூனை ஒன்று பிடிக்க வந்துள்ளது. இதை பார்த்த பஞ்சமூர்த்தி பூனையை விரட்டி விட்டு, அதனை பிடிக்க துரத்தி சென்றுள்ளார்....
பண்ருட்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க செயின் பறிப்பு
பண்ருட்டி, அக். 23: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மணிமேகலை(40). இவர், தனது கணவரிடமிருந்து பிரிந்து பண்ருட்டி அடுத்துள்ள கொள்ளுகாரன் குட்டையில் தனது மகன்களுடன் வசித்து வருகிறார். கொள்ளுகாரன் குட்டையில் பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பூ வியாபாரம் முடித்து வீட்டிற்கு கொள்ளுகாரன்குட்டை செல்போன் கடை அருகே நடந்து...
தியாகதுருகம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
தியாகதுருகம், அக். 23: தியாகதுருகம் அருகே மழையால் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி வனமயில் (65). இவரது கணவர் உயிரிழந்ததால் அண்ணா நகர் பகுதியில் உள்ள கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில்...
சென்னையிலிருந்து சிதம்பரம் வந்த குளிர்சாதன பஸ்சுக்கு உள்ளே ஒழுகும் மழையினால் பயணிகள் கடும் அவதி
சிதம்பரம், அக். 18: சிதம்பரத்திற்கு சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு குளிர்சாதன அரசு பேருந்தில் மழை உள் பகுதியில் கொட்டியதால் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி விழுப்புரம் பணிமனைக்கு சொந்தமான குளிர்சாதன அரசு பேருந்து...
செஞ்சி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்றது கழுதைப்புலிகள்
செஞ்சி, அக்.18: செஞ்சி பகுதியில் ஆடுகளைக் கொன்று குவிப்பது கழுதைப்புலிகள்தான் என நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்று வந்தது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு...