பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 20 பேருக்கு வாந்தி, மயக்கம்

ரெட்டிச்சாவடி, அக். 29: கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த 20 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில்...

கோமுகி அணை நிரம்பியதால் வினாடிக்கு 400 கன அடி நீர் வெளியேற்றம்

By Karthik Yash
28 Oct 2025

சின்னசேலம், அக். 29: கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் 44 அடி நீர் நிரம்பியதால், வினாடிக்கு 400 கன அடி நீரை உபரிநீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில், 46 அடிவரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதில்...

பகுதிநேர வேலை, ஆதார் அப்டேட் எனக்கூறி புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ.2.11 லட்சம் ஆன்லைன் மோசடி

By Karthik Yash
28 Oct 2025

புதுச்சேரி, அக். 29: பகுதி நேர வேலை, ஆதார் அப்டேட் எனக்கூறி புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ.2.11 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்துள்ளனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்....

கடலூரில் பரபரப்பு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் தண்ணீரை ஊற்றி போலீசார் காப்பாற்றினர்

By Karthik Yash
27 Oct 2025

கடலூர், அக். 28: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தனர்....

முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

By Karthik Yash
27 Oct 2025

ரெட்டிச்சாவடி அக். 28: கடலூர் முதுநகர் அடுத்த மணகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (55). பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருபவர். சம்பவத்தன்று வேல்முருகன் வண்டிபாளையம் அம்மன் கோயில் வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற 2 வாலிபர்கள் வேல்முருகன் சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து...

வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனை கடித்த வெறிநாய்

By Karthik Yash
27 Oct 2025

நெய்வேலி, அக். 28: நெய்வேலி வடக்குத்து சக்தி நகரை சேர்ந்தவர் மோகன் கவின்ராஜ் (7). இவர் வடக்குத்து நகரில் உள்ள முல்லை மழலையர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கவின்ராஜ் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வெறி நாய் திடீரென கவின்ராஜை துரத்தி வந்து கடித்தது. இதில் சிறுவனுக்கு...

பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிய 3 வாலிபர்கள் கைது

By Karthik Yash
25 Oct 2025

திருபுவனை, அக். 26: மதகடிப்பட்டு ஆண்டியார்பாளையம் சாலையில், அவ்வழியே சென்ற பொதுமக்களை 3 வாலிபர்கள் ஆபாசமான வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சென்று, அந்த நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல்...

மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான கணவர் கைது

By Karthik Yash
25 Oct 2025

முஷ்ணம், அக். 26: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்கு பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரளா(39). இவருக்கும், அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் ஆறுமுகம்(39) என்பவருக்கும் திருமணம் நடந்து மாமியார் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 நவம்பர் 18ம் தேதி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட...

கணவரை பார்க்க சென்ற மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

By Karthik Yash
25 Oct 2025

கள்ளக்குறிச்சி, அக். 26: கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா(28). கணவன், மனைவி இருவருக்கும் கடந்த ஒரு வருடமாக பிரச்னை இருந்து வருவதாக கூறபடுகிறது. இதையடுத்து விவாகரத்து சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜயகுமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், கடந்த 18ம் தேதி விஷம்...

போலி பங்கு சந்தை மூலம் ரூ.4.95 லட்சம் மோசடி

By Karthik Yash
24 Oct 2025

புதுச்சேரி, அக். 25: புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு ஆண் நபருக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போன் செய்து பங்கு சந்தையில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை நம்பி அவர் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்தார். பிறகு அவர் சம்பாதித்த பணம் மற்றும் முதலீடு செய்த பணம் ஆகியவற்றை...