குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட்

கடலூர், நவ. 6: குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் அருகே அன்னவள்ளி கிராமத்தில் சாலையில் நின்றிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். அதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குபதிந்து கார் ஓட்டிய சிறப்பு...

ஆன்லைன் முதலீடு எனக்கூறி 2 பெண்களிடம் ரூ.2.92 லட்சம் மோசடி

By Karthik Yash
05 Nov 2025

புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரி கதிர்காமத்தை சேர்ந்த பெண்ணுக்கு நண்பர் ஒருவர், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில், ஆன்லைன் முதலீட்டில் ரூ.1.08 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான லாபம் கிடைக்கவில்லை. முதலீடு பணத்தையும் அவரால் திரும்ப எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர், தான் ஏமாற்றப்பட்டதை...

இளம்பெண்ணை தாக்கிய கணவர் கைது

By Karthik Yash
04 Nov 2025

சின்னசேலம், நவ. 5: சின்னசேலம் அருகே லட்சியம் காடுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காளியாப்பிள்ளை(35). இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த சத்யா என்பவரும் திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வசித்து வந்தனர். மேலும் காளியாப்பிள்ளை நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் காளியாப்பிள்ளையும், அவரது மனைவி சத்யாவும், தீபாவளி பண்டிகையை ஒட்டி, அதே...

வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோ தீ வைத்து எரிப்பு

By Karthik Yash
04 Nov 2025

புதுச்சேரி, நவ. 5: புதுச்சேரி ராஜாநகரை சேர்ந்தவர் சசி (எ) சிவக்குமார் (47). இவர், புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள ஸ்டான்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். பின்னர் சாப்பிட்டு தூங்கி விட்டார். அதிகாலை 2 மணியளவில் வீட்டு வாசலில் சத்தம் கேட்டுள்ளது....

மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி விவசாயி கைது

By Karthik Yash
04 Nov 2025

விக்கிரவாண்டி, நவ. 5: விக்கிரவாண்டி அருகே காட்டு பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார். செஞ்சி வட்டம் கீழ் வையலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன்(48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1ம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் மில்டன் என்பவரது நிலத்தின் வழியாக சென்றபோது மணிலா பயிர் சாகுபடி நிலத்தில் காட்டு...

பல அணிகள் வந்தாலும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உறுதி

By Karthik Yash
31 Oct 2025

புதுச்சேரி, நவ. 1: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும் மலர்...

2500 டன் சோளம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.44 கோடி மோசடி

By Karthik Yash
31 Oct 2025

புதுச்சேரி, நவ. 1: புதுச்சேரி வெங்கடா நகர் பகுதியை சேர்ந்தவர் நிவாசன். இவர், அதே பகுதியில் சொந்தமாக சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டு நிவாசனை முதலியார்பேட்டை டிஜிட்டல் அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் புவனேஸ்வர், அவரது மனைவி சுபத்ரா மற்றும் இடைத்தரகர்...

மயிலம், பேரணி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு

By Karthik Yash
29 Oct 2025

மயிலம் அக். 30: விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் பேரணியில் ரயில் நிலையங்கள் உள்ளது. இங்கிருந்து பல்வேறு ரயில் பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மயிலம் மற்றும் பேரணி ரயில்வே நிலையங்களில் சிறிய அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் காலை 5:40 மணிக்கு பேரணி ரயில் நிலையத்தில் விழுப்புரத்தில் இருந்து...

இன்ஸ்பெக்டர் வாகனத்தை மறித்த ஐஆர்பிஎன் ஏஎஸ்ஐ கைது

By Karthik Yash
29 Oct 2025

திருக்கனூர், அக். 30: திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நலத்திட்ட நிகழ்ச்சிக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்புக்காக திருக்கனூர் போலீசார் அமைச்சரின் காரின் முன்பு சென்றுகொண்டு இருந்தனர். இதனிடையே செட்டிப்பட்டைச் சேர்ந்த புதுச்சேரி ஐஆர்பிஎன் ஏஎஸ்ஐ கதிரவன் என்பவர் சீருடை அணியாமல் திடீரென...

சங்கராபுரம் அருகே

By Karthik Yash
29 Oct 2025

சங்கராபுரம், அக். 30: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடமாமாந்தூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ் அன்பு தேவா மனைவி ஆண்டோ ஆரோக்கிய சகாயராணி (22). இவருக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று விவசாய நிலத்திற்கு அடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த பூச்சி...