குடிநீர் ஏற்றி சென்றபோது டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி போலீசார் விசாரணை

கடலூர், நவ. 13: குடிநீர் ஏற்றிச்சென்ற டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மீது சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அப்பகுதிகளுக்கு குடிநீர் வினியாகம் செய்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்...

மாமங்கலம் ஊராட்சியில் தேனீக்கள் கடித்து 10 பேர் காயம்

By Karthik Yash
12 Nov 2025

முஷ்ணம், நவ. 13: முஷ்ணம் அருகே மாமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்ட பணி நடந்து வருகிறது. நேற்று இங்குள்ள பெரிய ஆண்டவர் கோயில் அருகே உள்ள குளத்தில் இருந்து பணியாளர்கள் தண்ணீரை எடுத்து மரக்கன்றுகளுக்கு ஊற்றிவிட்டு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதிக்கு வந்த மலைத்தேனீக்கள்...

சொத்துக்காக முதியவர் கழுத்தை நெரித்து கொலை

By Karthik Yash
11 Nov 2025

வானூர், நவ. 12: வானூர் அருகே சொத்துக்காக தந்தையை வளர்ப்பு மகள் கணவருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியை சேர்ந்தவர் கலிவரதன் (73). இவர் கடந்த 9ம் தேதி வானூர் தாலுகா விநாயகபுரம் சுடுகாடு அருகே உள்ள நிலத்தில் பிணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுதொடர்பாக கலிவரதன் மனைவி...

அரியர் தேர்வெழுதிய வாலிபர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

By Karthik Yash
11 Nov 2025

கடலூர், நவ. 12: அரியர் தேர்வெழுதிய வாலிபர், திடீரென கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பகுதியில் தனியார் கல்லூரியில் நேற்று காலை அரியர் தேர்வு நடந்தது. இந்நிலையில் கல்லூரியில் படித்த பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்த உதயகுமார்(21) என்பவர், கல்லூரியின் 2வது மாடியில் அரியர்...

மது வாங்கி தராததால் வாலிபர் மீது தாக்குதல் முதியவர் கைது

By Karthik Yash
10 Nov 2025

பண்ருட்டி, நவ. 11: பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் ராஜராஜன் (31). இவர் பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் உள்ள ஹோட்டல் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த விஜி என்கிற விஜயகுமார் (56) மது வாங்கி கொடு என்று கேட்டுள்ளார்....

ராமநத்தம் அருகே சிலிண்டர் வெடித்து வீடு சேதம் தீக் காயங்களுடன் உயிர் தப்பிய மூதாட்டி

By Karthik Yash
10 Nov 2025

திட்டக்குடி, நவ. 11: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தை சேர்ந்த ராமர் மனைவி பெருமாயி (62). இவர் நேற்று வயலில் கூலி வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து சமைப்பதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும்...

போதையில் தாய் மீது தாக்குதல் பாசக்கார மகன் மீது போலீஸ் வழக்குப்பதிவு

By Karthik Yash
10 Nov 2025

விழுப்புரம், நவ. 11: விழுப்புரம் அருகே குடிபோதையில் தாயை சரமாரியாக தாக்கிய பாசக்கார மகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் ஊரல் கரைமேடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (40). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம்....

சிதம்பரத்தில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது

By Karthik Yash
06 Nov 2025

சிதம்பரம், நவ. 7: சிதம்பரம் பாலமான் கரை அம்பேத்கர் நகரில் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகியாக அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் தர்மதுரை (32), என்பவர் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் கோயிலின் உள்ளே சென்று உண்டியல், பித்தளை பொருட்கள், சூலம் உள்ளிட்டவை உடைத்து திருடிக் கொண்டிருந்தார். இதைப்...

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பழங்கால அகல்விளக்கு கண்ெடடுப்பு

By Karthik Yash
06 Nov 2025

விழுப்புரம், நவ. 7: விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் பழங்கால அகல் விளக்கு கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுடுமண்ணாலான அகல்விளக்கை அவர் கண்டெடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், தளவானூர் தென்பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுடுமண் அகல் விளக்கு தட்டு வடிவில் நான்கு...

நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் காலாப்பட்டில் மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
06 Nov 2025

  காலாப்பட்டு, நவ. 7: புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வருடம் அதே மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் இருவர் அங்கு நர்சிங் பயின்று வரும் 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள்...