விக்கிரவாண்டி அருகே சோகம் பைக் மீது லாரி மோதி விஏஓ, மகள் பரிதாப பலி

விக்கிரவாண்டி, நவ. 19: விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதி விஏஓ, அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). தாண்டவ சமுத்திரகுப்பம் கிராமத்தில் விஏஓவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை புதுச்சேரி, தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படிக்கும் தனது மகள்...

எலெக்ட்ரிக் பேருந்துகளில் செக்கர்கள் திடீர் சோதனை

By Karthik Yash
18 Nov 2025

புதுச்சேரி, நவ. 19: புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 23 கோடி செலவில் 25 பேருந்துகள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 17 பேருந்துகள் நகர்ப்புற வழித்தடங்களிலும், மீதமுள்ள 8 ஏசி பேருந்துகள் சுற்றுலா இடங்களை இணைக்கும் வழித்தடங்களிலும் ஓடுகிறது. மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா எதிரேவுள்ள...

கடலூரில் முதியோர் இல்லத்தில் இறந்த மூதாட்டி உடலை வலைதளம் மூலம் கண்டுபிடித்த மகன்

By Karthik Yash
18 Nov 2025

கடலூர், நவ. 19: கடலூர் முதுநகரில் கடந்த ஓராண்டாக முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில், சமூக வலைதளம் மூலம் அவரது மகனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்பு மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார். பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, தனது பெயர் தமிழரசி என்றும்,...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை

By Karthik Yash
17 Nov 2025

மரக்காணம், நவ. 18: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதுபோல் பெய்து வரும் மிதமான மழையால் இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் வங்கக்கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த...

புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

By Karthik Yash
17 Nov 2025

விழுப்புரம், நவ. 18: விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சுஜாதா மற்றும் போலீசார் தலைமையில் பனையபுரம் சோதனை சாவடி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் விழுப்புரம் ஜிஆர்பி...

இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

By Karthik Yash
17 Nov 2025

ரெட்டிச்சாவடி, நவ. 18: ரெட்டிச்சாவடி அடுத்த பெரிய காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் (24). சம்பவத்தன்று பெரிய காட்டு பாளையம் அய்யனார் வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முன்பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (20), முகேஷ் (20), அஜிந்திரன் (19) மற்றும் விஷால் (20) ஆகியோர் குடிபோதையில் விமலை அசிங்கமாக திட்டி...

அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

By Ranjith
14 Nov 2025

விழுப்புரம், நவ. 15: கும்பாபிஷேகம் நடந்த கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி விடுகின்றனர். விழுப்புரம் நாராயணன் நகரில் ஆதிபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடிந்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை சுத்தம் செய்வதற்காக...

புதுவை காண்டிராக்டரிடம் ரூ.2.49 கோடி மோசடி

By Ranjith
14 Nov 2025

புதுச்சேரி, நவ. 15: புதுச்சேரி காண்டிராக்டரிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ.2.49 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த நபர், கட்டுமான காண்டிராக்டர் மற்றும் காப்பீடு நிறுவன ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவரை, மர்ம நபர் அவரது வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்துள்ளார். பின்னர், அந்த...

விழுப்புரத்தில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

By Ranjith
14 Nov 2025

விழுப்புரம், நவ. 15: வீட்டை உடைத்து 6 பவுன் நகை, வெள்ளி, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் முகமதுஇப்ராஹிம். இவரது மனைவி அபிதாபேகம். இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தார். பிற்பகல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை...

பரங்கிப்பேட்டை அருகே தூக்குபோட்டு வாலிபர் சாவு

By Karthik Yash
12 Nov 2025

புவனகிரி, நவ. 13: பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன்(34). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வந்தார். இவருக்கு தைராய்டு நோய் இருந்ததால் மன வருத்தத்திலும், மன உளைச்சலும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முத்தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்...