புவனகிரி அருகே தொடர் மழையால் லால்புரம் கிராமத்தில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
புவனகிரி, நவ. 25: புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு, விட்டு பரவலாக மிதமான மழை பெய்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக புவனகிரி அருகே...
100ம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமம் உருவான தினம் கடைபிடிப்பு
புதுச்சேரி, நவ. 25: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம் உருவான தினத்தையொட்டி அரவிந்தர் மற்றும் அன்னை பயன்படுத்திய அறைகள் நேற்று பக்தர்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. புதுச்சேரியில் 1926ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி அரவிந்தர், ஆசிரமத்தை உருவாக்கினார். அரவிந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஆன்மீக பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அன்னை மீராவிடம், அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தை ஒப்படைத்தார். இதையொட்டி...
கஞ்சா கிடைக்கும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 17 வயது சிறுவன் அதிரடி கைது
விருத்தாசலம், நவ. 25: விருத்தாசலம் அருகே கஞ்சா கிடைக்கும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா கிடைக்கும் என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு குறித்து...
நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமிக்கு முதல்வர் செல்போனில் வாழ்த்து
வேப்பூர், நவ. 22: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியிடம் நலமாக இருக்கிறீர்களா என்று நலம் விசாரித்தார். அதற்கு பதிலளித்து நலமாக இருப்பதாக கூறி முதலமைச்சரிடம் நலம்...
ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த அதிமுக நிர்வாகி மீது புகார்
காட்டுமன்னார்கோவில், நவ. 22: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வடக்கு கொளக்குடி ஜாகிர் உசேன் நகரில் தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவை கடந்த 1 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி இரவு...
போலி சைக்கிள் நிறுவன மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனு ரத்து
புதுச்சேரி, நவ. 22: புதுச்சேரி காமராஜர் சாலையில் போலி சைக்கிள் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ரூ.2.45 கோடி பணம் இருந்தது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமை...
காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு நீதிமன்ற வளாகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
காட்டுமன்னார்கோவில், நவ. 21: கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் மகன் கண்ணன் (53). இவர் தனியார் நிதி நிறுவனத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டு சிவில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு காட்டுமன்னார்கோவில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அந்த வழக்கில் தனக்கு வரவேண்டிய ரூ.9000 பணத்தை விரைவில் வாங்கி...
அரசு தலைமை மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணம் அபேஸ்
கடலூர், நவ. 21: கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி(70). இவர் வயிற்றுவலி காரணமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர், அவரை ஸ்கேன் எடுக்கும்படி பரிந்துரை செய்துள்ளார். ஸ்கேன் எடுக்க வந்த இடத்தில் மாஸ்க் அணிந்து வந்த வாலிபர் ஒருவர், மூதாட்டிக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார் அப்போது...
நெடுஞ்சாலையில் பெயர் பலகை வைக்கும்போது விபரீதம் கிரேன் ரோப் அறுந்து விழுந்து தொழிலாளி பலி
உளுந்தூர்பேட்டை, நவ. 21: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கன்னியப்பன் (46) இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் - திருக்கோவிலூர் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழி சாலை போடும் பணியில் கிலோ மீட்டர் பெயர் பலகை வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த...