கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்த காவலர் பணியிடை நீக்கம் மாவட்ட எஸ்பி நடவடிக்கை
நெய்வேலி, அக். 17: கல்லூரி மாணவர்களை மிரட்டி ரூ.1.30 லட்சம் பறித்த காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பூவராகவன். இவர் டவுன்ஷிப் பகுதியில் புகை பிடித்த கல்லூரி மாணவர்களை பிடித்து, கஞ்சா வழக்கு போட்டு...
லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைக்கு 2 ஆண்டு சிறை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு
உளுந்தூர்பேட்டை, அக்.17: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராம தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு அந்த வழியாக சென்ற ஒரு லாரியை வழிமறித்து கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் (25) என்பவரிடம் ரூபாய் 7500 வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநாவலூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். இந்த புகாரின்...
அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் காலை உணவில் பல்லி 3 குழந்தைகள் மயக்கம்
செஞ்சி, அக்.17: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் அரசு நிதியுதவி பெரும் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை உணவு சாப்பிட்ட சில மாணவிகள் உணவில் பல்லி இருப்பதை கண்டுள்ளனர். இதனால் உணவு சாப்பிட்ட 7,8,9, வயது 3 குழந்தைகள் தங்களுக்கு மயக்கம் வருவதாக...
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.98 லட்சம் வசூல்
மேல்மலையனூர், அக். 16: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் கூடி அம்மன தரிசனம் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும். இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனைடம்...
பைக் மீது லாரி மோதி தனியார் கம்பெனி மேலாளர் ஹெல்மெட்டுடன் தலைநசுங்கி சாவு
புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம், வளவனூர் திருக்குறிப்புதொண்டர் நகரை சேர்ந்தவர் ராஜா (32). இவர், புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி பவானி என்ற மனைவி உள்ளார். 10 மாத ஆண் குழந்தை உள்ளது. ராஜாவும், கம்பெனியில் உடன் பணிபுரியும் சீனியர் இன்ஜினியர் புஷ்பராஜ்...
மயிலம் அருகே மதுபாட்டில் ஏற்றி சென்ற லாரி மீது வேன் மோதி விபத்து வேன் ஓட்டுநர் படுகாயம்
மயிலம், அக். 16: திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி டாஸ்மாக் மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி நேற்று சென்றது. மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் சென்றபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற வேன் ஒன்று லாரியின் பின்புறத்தில் திடீரென அதிவேகமாக மோதியதில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வேன் ஓட்டுநர் அரியலூர் மாவட்டம், எடையாறு, உத்திராபதி மகன் தமிழரசன்...
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.29 லட்சம் மதிப்பில் தானியங்கள் கொள்முதல்
கள்ளக்குறிச்சி, அக். 14: கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதில் நேற்று 129 விவசாயிகள், 1,146 மூட்டை தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்தனர். அதில் 1,000 மூட்டை மக்காச்சோளம், 70 மூட்டை...
கவர்னர், முதல்வர் கோரிக்கையை ஏற்று புதுச்சேரியில் ரூ.650 கோடிக்கு நான்கு வழிச்சாலை, புதிய மேம்பாலம் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
புதுச்சேரி, அக். 14: புதுச்சேரி கவர்னர் மற்றும் முதல்வர் கோரிக்கையை ஏற்று, நடேசன் நகரில் இருந்து முள்ளோடை சந்திப்பு வரை மேம்பாலமும், அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரை நான்கு வரை சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம்- ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான...
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தாய், மகன்
கள்ளக்குறிச்சி, அக். 14: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்நிலையில் சின்னசேலம் அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த பூவான் மகன் பாலு (47) என்பவர் அவரது தாய் அழகம்மாளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை...