மாடலிங் ஆசை காட்டி இளம் பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் சுருட்டிய வாலிபர் கைது
திருப்பூர், ஜூலை 11: திருப்பூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் பியூட்டிசியனாக பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் இவரது தோழியிடம் போனில் கணேஷ் எனும் பெயரில் அறிமுகமானவர் தொடர்ந்து மாடலிங் நிகழ்ச்சிக்கு இளம்பெண்களை அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரூ.35 ஆயிரம் கொடுத்து முன் பதிவு...
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடைந்த நிலையில் இருந்த டைல்ஸ் கற்கள் சரி செய்யப்பட்டது
திருப்பூர், ஜூலை 11: திருப்பூர் தாராபுரம் சாலை பெருச்சிபாளையம் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல் தளத்தில் டைல்ஸ் கற்கள் சேதம் அடைந்து நடந்து செல்பவர்களின் பாதங்களில் காயம் ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாக தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து...
பாறைக்குழியில் குப்பைகள் கொட்ட வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
திருப்பூர், ஜூலை 11: நெருப்பொிச்சல், வாவிபாளையம் அனைத்து அரசியல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் மாநகர பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இப்படி பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடும்...
அரசு பள்ளி மாணவர்கள் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் களப்பயணம்
திருப்பூர், ஜூலை 10: திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார்பெரியபாளையம் பகுதியில் அமைந்துள்ளது நஞ்சராயன் பறவைகள் சரணாலயம். இங்கு, உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு பறவைகளும் வலசை வரும். இந்த சரணாலயத்தில் திருப்பூரை சேர்ந்த பிச்சம்பாளையம், கருப்ப கவுண்டம்பாளையம் மற்றும் பத்மாவதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமை படை மாணவர்கள் நேற்று களப்பயணம் மேற்கொண்டனர். தேசிய...
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
திருப்பூர், ஜூலை 10: திருப்பூர் வடக்கு மாநகரத்துக்கு உட்பட்ட 24வது வட்ட கழகத்தில் 345 பூத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கை வாக்குசாவடி சமூக வலைத்தள முகவர் சரவணமூர்த்தி 100 சதவீதம் மேற்கொண்டார். அவரை திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் ஈ.தங்கராஜ் நேரில் சந்தித்து...
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி
திருப்பூர், ஜூலை 10: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், முடிவடைந்த பணிகளை திறந்து வைக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திருப்பூர் மாவட்ட...
250 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவது குறித்து எம்.எல்.ஏ ஆய்வு
திருப்பூர்,ஜூலை9: திருப்பூர் சுகுமார் நகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பொதுமக்கள் பலரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இதனால் தாங்கள் வசித்து வரும் பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என செல்வராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்....
தோப்பிற்குள் புகுந்து 200 தேங்காய்கள் திருட்டு
திருப்பூர்,ஜூலை9: பொங்கலூர் அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மஞ்சப்பூர் பிரிவுக்கு எதிரே உள்ளது. தற்போது தேங்காய் விலை உச்சத்தில் இருப்பதால் இவரது தோப்பிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தேங்காய்களை திருடி அங்கேயே அதனை உரித்து உள்ளனர். பின்னர் தேங்காய் மட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தேங்காயை மட்டும் திருடி சென்றுள்ளனர்....
அரசு மருத்துவமனையில் டைல்ஸ் கற்கள் சேதம்
திருப்பூர், ஜூலை 9: திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சளி, காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சிலர் வெளி நோயாளிகளாகவும், சிலர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை...